உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

'சீர்தளை வண்ணம்' என்னாது, ‘தளைசீர் வண்ணம்’ என முறை பிறழக் கூறினமையால், குற்றியலிகரக் குற்றியலு கரங்களைக் குற்றெழுத்தே போலக் கொண்டு அலகிடப்படும் எனக் கொள்க.

'தளைசீர் வண்ணம் கெடவரும்' என்னாது ‘தாம்கெட வரினே' என்ற விதப்பினால், தனிநிலை அளபெடை நேர்நேர் ஆகவும், இறுதி நிலை அளபெடை நிரை நேர் ஆகவும் வைக்கப் படும், மூன்று மாத்திரையின் மிக்க பல மாத்திரையான் வரினும்,’ எனக் கொள்க. என்னை?

766

“தனிநிலை அளபெடை நேர்நேர் இயற்றே இறுதிநிலை அளபெடை நிரைநேர் இயற்றே

என்றார் ஆகலின்.

யா. கா. 37. மேற்.

டைநுடங்க ஈர்ங்கோதை’ என்னும் தொடக்கத்தன

அளபெடுப்பன அல்ல. என்னை?

66

‘மாத்திரை வகையாற் றளைதபக் கெடாநிலை யாப்பழி யாமைநின் றளபெடை வேண்டும்

யா. கா. 4. மேற்.

என்ப ஆகலின். “அதனால் இச்சூத்திரத்துள். 'அளபெடை ஆவியும்' என்பது வேண்டா என்று விடுத்திடலாமோ?” எனின், அற்றன்று; செய்யுளகத்தும் பரவை வழக்கினுள்ளும் ‘கடாக் களிறு, படாமுலை' என்று அளபெடாதே தத்தம் பொருளைப் பயக்கும் சொற்கள், ஒருசார்ச் செய்யுளகத்து வந்து மாத்திரை சுருங்கிச் சீரும் தளையும் சிதைய வந்தால்,

கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர் படாஅ முலைமேற் றுகில்”

என்று சீரும் தளையும் சிதையாமே அளபெடுக்கும். 'நிலம்பாய்ப்பாய்ப் பட்டன்று நீலமா மென்றோள்

66

- குறள். 1087

கலம்போய்ப்போய்க் கௌவை தரும்” - தொல். செய். 17. மேற். பேரா.

யா. வி. 93. 95. மேற்.

என்றித் தொடக்கத்தன மாத்திரை சுருங்கிச் சீரும் தளையும் சிதைய நில்லா ஆகலின், அளபெடா என்பது. என்னை?

“மாத்திரை வகையாற் றளைதபக் கெடாநிலை யாப்பழி யாமைநின் றளபெடை வேண்டும்"

என்றார் ஆகலின்.

1. இந்நூற்பா நற்றத்தனார் பாடியது என்பர்.

யா. கா. 4. மேற்.