உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

முதலாவுடையனவற்றுள்

69

இதன் கருத்து, பரவை வழக்கினுள் பண்ட மாற்றும், நாவல் கூறலும், அவலமும், அழுகையும், பூசலிடுதலும், முறையிடுதலும் அளபெடுத்த மொழிகள் செய்யுளகத்து வந்து உச்சரிக்கும்பொழுது அளபெடா என்பது இலக்கணம் இன்மையின், செய்யுளகத்தே வந்து தளை சீர் வண்ணம் கெட நின்றால் அலகு பெறா என்பதற்கு, 'அளபெடை ஆவியும் அலகியல்பில', என்பது சொல்லவேண்டும் என்க. அல்லதூஉம்,

6

766

ஆழி இழைப்பப் பகல்போம்; *இரவரின் தோழி துணையாத் துயர்தீரும்; - ‘வாழி நறுமாலை தாராய் 'திரையவோஒ!' என்னும் 3செறுமாலை *சென்றடையும் போழ்து

யா. கா. 44. மேற்

யா. வி. 96

என்னும் பொய்கையார் வாக்கினுள், திரையவோஒ என்பதனைப் புளிமாங்காயாக வைப்பினும், வகையுளி சேர்த்துக் ‘கருவிளம்' என்னும் சீராக வைப்பினும் சீரும் தளையும் சிதைந்து செய்யுள் அழிய நிற்பதன்று ஆயினும், விளி முதலியவற்றுள் அளபெழுந்த செய்யுளிடத்து அவ்வாறே சொல்லப்படும் என்னும் கருத்தினால் அகத்தியனார் ஆனந்த ஓத்தினுள் இதனை,

66

இயற்பெயர் சார்த்தி எழுத்தள பெழினே *இயற்பா டில்லா 4எழுத்தா னந்தம்

என்றார் என்க : பிறரும் கூறினார். என்னை?

"சீர்தளை சிதைவுழி ஈருயிர்க் குறுக்கமும் நேர்தல் இலவே உயிரள பெடையும்

என்றார் மகேச்சுரர்.

66

இஉ இரண்டன் குறுக்கம் தளைதப

-யா. கா. 44. மேற். -யா. வி. 95. மேற்.

யா. வி. 95. மேற்.

நிற்புழி ஒற்றாம் நிலைமைய ஆகும்”

"உயிரள பேழும் உரைத்த முறையான் வருமெனின் அவ்வியல் வைக்கப் படுமே

என்றார் காக்கைபாடினியார்.

1.

2.

- யா. வி. 95. மேற்.

- யா. வி. 95. மேற்.

கூடலிழைத்தல்; தலைவன் வருவானா என்பதை நிலத்தில் வட்டமாகக் கோடிட்டுப் பார்க்கும் ஒரு வழக்கம்.

சோழனே. 3. கொல்லும் மாலைப் பொழுது. 4. எழுத்துக் குற்றம்

(பா. வே) *இரவெல்லாம் *சென்றணைந்தபோது . *இயற்பட லில்லா.