உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. அசை ஓத்து

அசையின் வகை

5. நேரசை என்றா நிரையசை என்றா

ஆயிரண் டாகி அடங்குமன் அசையே.

என்பது சூத்திரம். 'இவ்வோத்து என்ன பெயர்த்தோ?' எனின், எழுத்தினான் அசை ஆமாறு உணர்த்திற்று ஆகலான், 'அசை ஓத்து' என்னும் பெயர்த்து.

ச்சூத்திரம் என் நுதலிற்றோ?' எனின், எழுத்தினான் ஆக்கப்பட்ட அசைகளது பெயர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

(இ- ள்) "நேரே நிரையே நேர்பே நிரைபென

ஈரிரண் டென்ப அசையின் பெயரே’

- யா. வி. 95. மேற். என விரித்து உரைத்தாராயினும், தொகுத்து நோக்குங்கால், அசையே- அசை, நேரசை என்றா நிரையசை என்றா-நேரசையும் நிரையசையும் என, ஆயிரண்டாகி அடங்கும் - அவ்விரண்டாய் அடங்கும் என்றவாறு.

1நேர்நேராய் ‘நேர்பு' அடங்கும்; நிரைநேராய் ‘நிரைபு’ அடங்கும். நேர்நிரை என்னாது நேரசை நிரையசை என்று விதந்து ஓதிய அதனால் நேரசை ஓரலகு பெறும் ; நிரையசை இரண்டலகு பெறும் எனக்கொள்க. என்னை?

“நேரசை ஒன்றே நிரையசை இரண்டல(கு) ஆகும் என்ப அறிந்திசி னேரோ”

எனவும்,

“நேரோர் அலகு நிரையிரண் டலகு

நேர்புமூன் றலகு நிரைபுநான் கலகென்

றோதினர் புலவர் உணரு மாறே”

- யா. வி. 95. மேற்.

எனவும் சொன்னார் அவிநயனார் ஆகலின்.

1. நேரசையோடு ஒன்றிவந்த குற்றுகரமும் அதனொடு ஒன்றிவந்த முற்றுகரமும் நேர்பசை எனப்படும். நிரையசையோடு ஒன்றிவந்த குற்றுகரமும் அதனொடு ஒன்றிவந்த முற்றுகரமும் நிரைபசை எனப்படும்”

(தொல். செய்யுள். 4. பேரா.)