உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

"நேர்நேர் நிரைநேராய் நேர்பு நிரைபடங்கும்;

சீர்மேல் அசைபலவாய்ச் செல்லுங்கால் - ஈரியல்பிற் குற்றிபோற் குற்றுகரம் கொண்டியற்ற நேர்நிரையாய் முற்றும் முடிந்து விடும்

என்றார் பிறரும்.

இனி ஒருசார் வட நூல்வழித் தமிழாசிரியர், ‘நேர், நிரை, நேர்பு, நிரைபு’ அசைகள் ர, ட, ரு, டு வடிவாக இடுவாரும் உளர்.

என்னை?

"நேர்நிரை நேர்பு நிரைபென நான்கும் ரடருடுப் போல ஒருவிரல் நேரே”

எனவும்,

டு

“விரலிடை இட்டன அசைச்சீர் நாலசை விரல்வரை இடையினும் 'மானம் இல்லை’

99

எனவும்,

“விரலிடை இட்டன ரடருடு வடிவம்

2நிரல்ப எழுதி அலகு பெறுமே’

என்றார் மயேச்சுரர்?

இனி, நேரசை நிரையசைகளைத் ‘தனியசை,

ணையசை’

என்பாரும் உளர். என்னை?

“தனியசை என்றா இணையசை என்றா

இரண்டென மொழிமனார் இயல்புணர்ந் தோரே"

என்றார் காக்கைபாடினியார்.

நேரசை

6. நெடில்குறில் தனியாய் நின்றுமொற் றடுத்தும் நடைபெறும் நேரசை நால்வகை யானே.

(க)

என்பது சூத்திரம். ‘இஃது என் நுதலிற்றோ?' எனின், அதிகாரம் 3பாரித்த இரண்டசையுள்ளும், முதற்கண் நேரசை ஆமாறு சையுள்ளும்,முதற்கண் உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்.) நெடில் குறில் தனியாய் நின்றும் - நெட்டெழுத்துத் தனியே நின்றும், குற்றெழுத்துத் தனியே நின்றும், ஒற்று அடுத்தும் - நெட்டெழுத்து ஒற்றடுத்து நின்றும், குற்றெழுத்து ஒற்றடுத்து நின்றும், நடைபெறும் நேரசை நால்வகையானே- நேரசை இந்நான்கு வகையானும் நடத்தல் பெறும் என்றவாறு. 1. குற்றம் 2. வரிசை. 3. விரித்த ; எடுத்துரைத்த.