உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

‘என்பது என் நுதலிற்றோ?' எனின், மேற்சூத்திரத்துத் ‘தனிக்குறில் நேரசையாம்' என்றவழி, அஃது இன்ன இடத்தன்றி ஆகாது என்பது உணர்த்துதல் நுதலிற்று.

ள்) குறிப்பே ஏவல் தற்சுட்டு அல்வழி தனிக் குறில் - குறிப்பின்கண்ணும் ஏவற்கண்ணும் தற்சுட்டின்கண்ணும் அல்லாத வழித் தனிக்குறில், மொழி முதல் தனியசை இலவே- மொழி முதற்கண் நின்று நேரசை ஆதல் இல என்றவாறு.

66

என்னை?

'தற்சுட் டேவல் குறிப்பிவை அல்வழி முற்றத் தனிக்குறில் முதலசை ஆகா

என்றார் பல்காயனார்.

2

99

(உ-ம்) “உண்ணான் 'ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான் துன்னருங் கேளிர் துயர்களையான் - 3கொன்னே வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அஆ! இழந்தான்என் றெண்ணப் படும்"

- நாலடி. 9.

இதனுள் ‘அஆ' என்புழிக் குறிப்பின்கண் தனிக்குறில் மொழி முதற்கண் நின்று நேரசை ஆயிற்று.

4“வெறிகமழ் *தண்புறவின் வீங்கி உகளும்

7

'மறிமுலை உண்ணாமை வேண்டிப் - °பறிமுன்கை

அஉ அறியா அறிவில் இடைமகனே!

  • நொ அலையல் நின்னாட்டை நீ’

- யா. கா. 37. மேற்.

யா. வி.37. 95 மேற்.

இதனுள் 'நொ' என ஏவற்கண் தனிக்குறில் மொழி முதற்கண் வந்து நேரசை ஆயிற்று. 'நொ’ என்றது. 'ஒன்றைச் செய்' என்றமையான் ஏவல். 'அஉ அறியா' எனத் தற்சுட்டின் கண் தனிக்குறில் மொழி முதற்கண் நின்று நேரசையாயிற்று. 'அஉ அறியா' என்பதில் அகரம் தன்னை உணர்த்திற்று; ஆதலால், தற்சுட்டு.

குறிப்பே' என ஏகாரம் மிகுத்துச் கூறிய அதனால், சுட்டின் கண்ணும் வினாவின்கண்ணும் ஒருசார் தனிக்குறில், மொழி முதற்கண் வந்து நேரசையாம். என்னை?

1. உளநாளில் புகழை நிலைநிறுத்தான். 2. வாய்த்தற்கு அரிய உறவினர். 3. பயனின்றி ; வாளா. 4. இஃது இடைக்காடனார் பாடல் என்பர். 5. ஆட்டுக்குட்டி. 6.பனையோலைத் தடுக்கு. 7. எட்டும் இரண்டும் அறியாத; அ, உ என்பன தமிழில் 8,2 என்னும் இலக்கங்களைக் குறிக்கும். 8. துன்புறுத்தாதே.

(பா. வே) தண்சிலம்பின் அஉம் என்பது ஆயின், அ என்னும் எழுத்தையும் அறியாத.