உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

“ஏவல் குறிப்பே தற்சுட் டல்வழி யாவையும் தனிக்குறில் முதலசை ஆகா; சுட்டினும் வினாவினும் உயிர்வரு காலை ஒட்டி வரூஉம் ஒருசாரும் உளவே"

என்றார் மயேச்சுரர்.

(உ-ம்). “அஅவனும் இஇவனும் உஉவனும் கூடியக்கால் எஎவனை வெல்லார் இகல்?”

வினா.

75

இதனுள் முன்னைய மூன்றும் சுட்டு ; எஎவன் என்பது

‘குறிப்பே ஏவல் தற்சுட்டு..... அசையிலவே,' என்றாலும், 'மொழி முதல்' என்பது பெறலாம். என்னை?

66

"ஒற்றின் றாகியும் குறிப்பே ஏவல்

தற்சுட் டல்வழி முதல்தனி நேராம்'

என்றார் ஆகலின். அவ்வாற்றலாற்பெற வைத்தும், 'மொழி முதல்’ என்று விகற்பித்த அதனால், குறிப்பே ஏவல் தற்சுட்டின் கண் வந்த குற்றெழுத்து விட்டிசைப்பின் அல்லது மற்றொன்றனோடு இயைந்து இனியவாய் நடப்பினும் முதற்கண் நேரசை ஆகா.

வரலாறு :

1“யரல வழள இடையின மாம் ஏனை மரபு பிழையாத வைப்பு”

266

3

அமருந்து தானை அதியர் தம் கோவே! துமருந்து தூயனவே கொண்டு

என்ற இவற்றுள், யரல வழள என்பன தற்சுட்டின்கண்ணும் து என்பது ஏவற்கண்ணும் வந்து விட்டிசையாது, மற்றொன்ற னோடு இயைந்து இனியவாய் நடத்தலின் நேரசை யாகாவாய் நிரையசையாயின.

'இலவே' என்னும் தேற்றேகார விதப்பினால், குறிப்பு ஏவல் தற்சுட்டின்கண் வந்த குற்றெழுத்து விட்டிசைத்து நிற்பின், மொழியிடையும் இறுதியும் நின்றும் நேரசையாம்.

(உ-ம்.) "அஇ உஎ ஒ இவை குறிய மற்றை

ஏழ்நெட் டெழுத்தா நேரப் படுமே

என மொழியிடையிலும் கடையிலும் குற்றெழுத்து தற்சுட்டின் கண் வந்து நேரசை ஆயின. பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க. (2)

1. தற்சுட்டு. 2. பேரெழுச்சி. 3. து-உண்.