உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

நிரையசை

அ. குறிலிணை குறில்நெடில் தனித்துமொற் றடுத்தும்

நெறிமையின் நான்காய் வருநிரை அசையே.

என்பது சூத்திரம். 'இஃது என் நுதலிற்றோ?' எனின், நிரையசை ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்). குறில் இணை குறில் நெடில் தனித்தும் - குறில் இரண்டு இணைந்தும், குறில் நெடில் இணைந்தும், ஒற்று அடுத்தும்- குறில் இணை ஒற்றடுத்தும், குறில் நெடில் இணை ஒற்றடுத்தும், நெறிமையின் நான்காய் வரும் நிரையசையே- நிரையசை இந்த நான்கு முறைமையினும் வரும் என்றவாறு.

‘தனித்தும்' என மிகுத்த அதனால், நேரசைகட்கும் நிரை யசைகட்கும் ஓதிய எழுத்துக்கள் மொழியாய் நிற்பினும், மொழிக்கு உறுப்பாய் நிற்பினும் கொள்ளப்படும். அவற்றுள் பொருள் பயந்து நிற்பன ‘சிறப்பசை’ என்றும், மொழிக்கு உறுப்பாய் நிற்பன ‘சிறப்பில் அசை’ என்றும் வழங்கப்படும். இவ்விரண்டினானும் 'எட்டசையும் 2உறழப் பதினாறாம்.

"நெறிமையின்' என்ற விதப்பினால், நெடில் இரண்டு இணைந்தும் நெடில் குறில் இணைந்தும் நிரையசை ஆகா.

என்னை?

“நெடிலோடு நெடிலும் நெடிலோடு குறிலும்

இணையசை ஆதல் இலவென மொழிப ப

என்றார் காக்கைபாடினியார்.

(உ.ம்) வெறி, சுறா, நிறம், விளாம் என வரும்

6

வெறி- குறில் இரண்டு இணைந்த நிரையசை.

சுறா- குறில்நெடில் இணைந்த நிரையசை.

நிறம்- இரு குறில் இணைந்து ஒற்றடுத்த நிரையசை. விளாம்- குறில்நெடில் இணைந்து ஒற்றடுத்த நிரையசை.

'பல, பலா, பலம், பலாம்' எனவும், 'மரு, பலா, முயல், கிழான், எனவும், 'கழி, கனா, கடல், கடாம்’ எனவும், ‘கறி, பொரு, கடா, கடாம்' எனவும் வரும். பிறவும் அன்ன.

66

உதாரணச் செய்யுள் :

கடியுலாய் நிமிர்ந்த கயங்குடை வராஅல்

எனவும்,

1. நேரசை நான்கும் நிரையசை நான்கும் 2. பெருக்க.

99