உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

“அணிநிழ லசோகமர்ந் தருள்நெறி நடாத்திய

மணிதிக ழவிரொளி வரதனைப்

பணிபவர் பவநனி பரிசறுப் பவரே”

77

யா. கா. 5. மேற்.

எனவும் இவை நிரையசை நான்கும் வந்த செய்யுள். அல்லதூஉம்

“நெடில்குறில் தனியாய் நின்றுமொற் றடுத்தும் குறிலிணை குறினெடில் தனித்துமொற் றடுத்தும் நடைபெறும் அசைநேர் நிரைநா லிரண்டே

என்றார் பல்காயனார்.

"குறிலே நெடிலே குறிலிணை குறினெடில் ஒற்றொடு வருதலோடு மெய்ப்பட நாடி நேரும் நிரையும் என்றிசிற் பெயரே”

என்றார் தொல்காப்பியனார்.

“தனிநெடில் தனிக்குறில் ஒற்றொடு வருதலென் றந்நால் வகைத்தே நேரசை என்ப

66

“குறிலிணை குறினெடில் ஒற்றொடு வருதலென்(று) அந்நால் வகைத்தே நிரையசை என்ப

என்றார் நற்றத்தனார்.

99

“நேர்நால் வகையும் நெறியுறக் கிளப்பின் நெடிலும் குறிலும் தனியே நிற்றலும் அவற்றின் முன்னர் ஒற்றொடு நிற்றலும் இவைதாம் நேரசைக் கெழுத்தின் இயல்பே"

66

- தொல். செய்யுள். 3.

"இணைக்குறில் குறினெடில் இணைந்துமொற் றடுத்தும் நிலைக்குறி மரபின் நிரையசைக் கெழுத்தே’

என்றார் சங்க யாப்பு உடையார்.

“நெடிலும் குறிலும் ஒற்றொடு வருதலும் கடிவரை இலவே நேரசைத் தோற்றம்”

66

“குறிலும் நெடிலும் குறில்முன் நிற்பவும்

நெறியினொற் றடுத்தும் நிரையசை ஆகும்”

யா. வி. 95. மேற்

– யா.வி. 95. மேற்

என்றார் பிறைநெடுமுடிக் கறைமிடற்றரனார் பெயர்

மகிழ்ந்த பேராசிரியர். (மயேச்சுரர்)

“தனிநெடி லாகியும் தனிக்குறி லாகியும் ஒற்றொடு வந்தும் நேரசை யாகும்"