உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

"குறிலிணை யாகியும் குறினெடி லாகியும்

ஒற்றொடு வந்தும் நிரையசை யாகும்" என்றார் சிறுகாக்கைபாடினியார்'

ஐகாரக்குறுக்கம் இணைந்த நிரையசை

9. ஈறும் இடையும் இணைந்தும் 'இணையசை ஆகும்ஐ என்ப அறிந்திசி னோரே.

என்பது சூத்திரம். இஃது என் நுதலிற்றோ?' எனின், ஐகாரக் குறுக்கம் இணையசையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்) சீர்க்கு இறுதியும் இடையும் நின்ற ஐகாரம், ஐகாரத்தினோடு இணைந்தும் நிரையசையாம் என்றவாறு.

66

இணைந்தும்' என்ற உம்மையான், 3அல்வழி ஐகாரம் குற்றெழுத்தே போல நின்று பிறிதோர் எழுத்தினோடு இணைந்து நிரையசையாம்.

5

“சீர்” என்பது, 4ஆற்றலாற் பெற்றது. அதனை அரிமா நோக்கு' எனினும், ‘அதிகாரம்' எனினும் அமையும்.

66

குற்றெழுத்தே போல' என்பது,

விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும்

என்ப ஆகலானும்,

66

'குறுமை எழுத்தின் இயல்பே ஐகாரம்

நெடுமையின் நீங்கியக் கால்”

என்றார் ஆகலானும் சொல்லப்பட்டது.

66

- யா. கா. 4. மேற்.

யா. கா. 36. மேற்.

அந்தமும் நடுவும் நிரையசை யாகும்,' எனவே, ஆதிக்கண்

நின்ற ஐகாரம் நிரையசை ஆகாது. என்னை?

“ஐயென் நெடுஞ்சினை ஆதி ஒழித்தல(கு)

66

எய்தும் இணையசை என்றிசி னோரே

என்றார் காக்கைபாடினியார்.

இடையும் கடையும் இணையும் ஐ எழுத்தே

என்றார் சிறுகாக்கைபாடினியார்.

1. குறிலே நெடிலே குறிலிணை ஏனைக் குறினெடிலே நெறியே வரினும் நிரைந்தொற் றடுப்பினும் நேர்நிரையென் றறிவேய் புரையுமென் றோளி யுதாரண மாழிவெள்வேல்

2.

வெறியே சுறாநிறம் விண்டோய் விளாமென்று வேண்டுவரே.

என்னும் காரிகைச் செய்யுள் இவண் கருதத் தக்கதாம் (யா. கா. 5)

நிரையசை. 3. இணை அல்லாத வழி. 4. இன்ன சொல் இன்ன பொருள் உணர்த்தும் என்னும் நியதி. 5. சிங்க நோக்கு; அது முன்னும் பின்னும் நோக்குவது.