உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. சீர் ஓத்து

சீர்களின் பெயர் வேறுபாடு

க. 'இயற்சீர் உரிச்சீர் பொதுச்சீர் என்று மயக்கற வகுத்த சீர்மூன் றாகும்.

என்பது சூத்திரம். இவ்வோத்து அசையினாற் சீராமாறு உணர்த்திற்று ஆகலான், ‘சீர் ஓத்து' என்னும் பெயர்த்து.

66

"இச்சூத்திரம் என் நுதலிற்றோ?"எனின், அசைகளான் ஆகிய சீர்களது வேறுபாடும், அவற்றது எண்ணும் உணர்த்துதல் நுதலிற்று.

-

ள்) இயற்சீர் உரிச்சீர் பொதுச்சீர் என்று இயற்சீரும் உரிச்சீரும் பொதுச்சீரும் என்று, மயக்கு அற வகுத்த சீர்மூன்று ஆகும் ஐயம் அற வகுக்கப்பட்ட சீர் மூன்று வகைப்படும் என்றவாறு.

-

இவை இம்முறையே வைத்த காரணம் என்?' எனின், இயற்சீர் எல்லாச் செய்யுளுள்ளும் இயன்று இனிது நடத்தலின், சிறப்பு உடைத்து என்று முன் வைக்கப்பட்டது. என்னை?

“சிறப்புடைப் பொருளை முந்துறக் கிளத்தல்'

என்பது தந்திர உத்தி ஆகலின்.

உரிச்சீர் எல்லாச் செய்யுளுள்ளும் வரும் எனினும், வெண்பாவிற்கும், வஞ்சிப்பாவிற்கும் உரிமை பூண்டு நிற்றலின், டைக்கண் வைக்கப்பட்டது.

பொதுச்சீர் அருகியன்றி வாராமையின், கடைக்கண் வைக்கப்பட்டது.

1. “ஈரசை நாற்சீர் அகவற் குரியவெண் பாவினவாம்

நேரசை யாலிற்ற மூவசைச் சீர்நிரை யாலிறுப

வாரசை மென்முலை மாதே வகுத்தவஞ் சிக்குரிச்சீர்

ஓரசை யேநின்றும் சீராம் பொதுவொரு நாலசையே

என்பது காரிகை. (யா. கா. 6) இயற்சீரை முதற்சீர் எனவும் நேரீற்று உரிச்சீரை இடைச்சீர் எனவும், நிரையீற்று உரிச்சீரைச் கடைச்சீர் எனவும் வழங்கும் வீரசோழியம் (யாப்பு. 1-2).