உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

அல்லதூஉம், இரண்டு மூன்று நான்கு என்னும் அசைகளாய் அடுக்கப்படுதலின், எண்முறை வைத்ததூஉம் ஆம். என்னை?

"இயற்சீர் உரிச்சீர் பொதுச்சீர் என்னும்

நிகழ்ச்சிய என்ப நின்ற மூன்றும்”

என்றார் மயேச்சுரர்.

66

சீர்மூன் றாகும்’, எனினும், குறித்த பொருளைக் கொண்டு நிற்கும், 'மயக்கற வகுத்த' என்ற மிகையால், நேரசையும் நிரை யசையும், நேர்பு அசையும், நிரைபு அசையும் என நான்கு அசைவேண்டினர் தொல்காப்பியர் முதலிய ஒரு சாராசிரியர்; நேர்பு அசை நிரைபு அசை வேண்டாது, நேரசை நிரையசை வேண்டி, நாலசைப் பொதுச்சீர் வேண்டினார், வேண்டினார், காக்கை பாடினியார் முதலிய ஒருசார் ஆசிரியர்; நேர் நிரை, நேர்பு, நிரைபு என்னும் நாலசையும் நாலசைப் பொதுச்சீரும் வேண்டினார் பல்காயனார் முதலிய ஒருசார் ஆசிரியர்; இந் நூலுடையார் நேர்பு அசையும் நிரைபு அசையும் வேண்டாது; நாலசைப் பொதுச்சீரும் வேண்டாமே நடப்பதோர் உபாயம் கண்டாரேனும், முதல் நூலின் வழி நில்லாது தமது மதம் படுத்துச் சொன்னார் என்னும் பாதுகாவல் நோக்கியும்,

“உலகம் தழீஇய தொட்ப மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு”

- திருக்குறள். 425.

என்ப ஆகலானும், அவ்வாறு உரைப்பின் நுண்ணுணர் வினார்க்கு அல்லது அறிவரிது அகலானும், காக்கைபாடினியார் முதலிய தொல்லாசிரியர்தம் மதம் பற்றி ஈண்டு நாலசைச்சீர் எடுத்தோதினார் என்பது அறிவித்தற்கெனக் கொள்க. நாலசைச் சீர் வேண்டாமே நடாத்தும் உபாயம் போக்கிக் கூறுதும். அல்லதூஉம், சீர்வயின் பொருள் பயந்து நிற்பனவற்றைச் ‘சிறப் புடைச்சீர்’ என்றும், வகையுளி சேர்ந்து நிற்பனவற்றைச் ‘சிறப்பில்சீர்’ என்றும் சொல்வர் என்பது அறிவித்தற்கும் வேண்டப்பட்டது;

“விதப்புக் கிளவி வேண்டியது விளைக்கும்” என்ப ஆகலின்.

“குற்றுகரம் ஒற்றாக்கிக் கூன்வகுத்துச் சிந்தியற்றி

மற்று நெடிலும் வகையுளியும் - சொற்றபின்

1. முன்னும் பின்னும் அசை முதலாகிய உறுப்புக்கள் நிற்புழி அறிந்து குற்றப்படாமல் வண்ணம் அறுத்தல் (யா. வி. சூ. 95 உரை).