உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை இன்பம்

இப்பெயரிய நூல் சென்னை, செம்புதாசுத் தெரு, உமாதேவன் கம்பெனி என்பதன் வழியாக 1948 இல் வெளி வ வந்ததாகும். 30-04-1945 இல் கா. சு. இயற்கை எய்தினார். ஆதலால். அவர் காலத்திற்குப் பின்னர் வெளிவந்த நூல்களுள் ஒன்றாகும் இது.

மேற்குறித்த பதிப்பகத்தார் ‘அறிவுச்சுடர்’ என்னும் தலைப்பில் வெளியிட்ட வரிசையில் ஒன்றாக வெளி வந்தது வாழ்க்கை இன்பம். மலர்தொறும் சார்ந்து துளித்துளியாகத் தேனைச் சேகரித்துப் பிறர்க்குதவும் பெற்றி வாய்ந்த தேனீக்களைப் போலப் பன்னூற் பயிற்சியாலும், வாழ்க்கை அனுபவத்தாலும் அரிதின் முயன்று சேகரித்த அருங்கருத்துகளை அனைவருங் கற்றுப் பயனெய்துமாறு அறிஞர்கள் எழுதி உதவும் நூல்களை வெளியிட்டு வருவதாகக் கூறும் இந்நூல் முன்னுரை, நூலாக்க முறை, பயன் ஆகியவற்றை விளக்குகிறது.

தோற்றுவாய் முதல் நினைவாற்றலால் நோய் நீக்கு முறை என்பது ஈறாக இருபத்திரண்டு தலைப்புகளில் சிறு சிறு கட்டுரைகளைக் கொண்ட தொகை நூல், இது. இதன் பக்கங்கள் 91.

கட்டுரைத் தலைப்புகளை அறிந்த அளவானே நூற் பயன் விளங்குமாறு அமைந்துளது. அவை: தோற்றுவாய், உடலமைப்பு, பற்கள், உணவின் செரிமானம், இரத்த ஓட்டம், மூச்சுக் கருவிகள், எலும்பும் தசையும், நரம்பின் அமைப்பு, தோல், உணவு கொள்ளுதல், பானம், நோய் நீக்கும் இயற்கை முறை, கால் முழுக்கு, முழுக்கு, மண வாழ்க்கை, விளையாட்டு வாழ்க்கை, ஓய்வு, முதுமையில் வசதிக் குறைகள், பிள்ளைப்பேறு, குழந்தைப் பாதுகாப்பு, பொதுவான நோய் நீக்க முறைகள், நினைவாற்றலால் நோய் நீக்கும் முறை என்பன.

உடலியல், உணவியல், மருத்துவ இயல், வாழ்வியல், என நான்கு இயல்களாகப் பெருமைப் படுத்திப் பார்க்கும் அளவிலும் நூல் அமைந்திருத்தல் விளங்குகின்றது. எப்பகுப்பால்