உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் 'கா.சு.' கலைக்களஞ்சியம்

147

பார்ப்பினும், எவ்வகைத் துறைப்பால் படுத்தி ஆராயினும் முழுமை அல்லது ஊடகம் ‘வாழ்க்கை இன்பமே' ஆதலால் இப் பெயரைச் சூட்டினார் எனலாம்,

இத்தகு உடல் நலக் கட்டுரைகளும், துறை நிலைக் கட்டுரைகளும் கா. சு. எழுதுவதற்கு அடிப்படையாக இருந்தது, ‘மணிமாலை' என்னும் மாதிகையே என்பது இவண் நோக்கத் தக்கது. மணிமாலை பற்றிய கட்டுரை காண்க.

நமக்கு ஓர் உடலுண்டு என்றும், அதனைப் பேணுதல் கடன் என்றும் எப்பொழுது நினைக்கிறோம்! நோய் வந்த போதேயன்றோ! நோய் வராக்காலும் அதனை நோய்க்கு ஆட் படுத்தாமல் காக்கக் கருதிப் பேணிக் கொள்பவரே வருமுன் காக்கும் அறிவர்; எதிரதாக் காக்கும் ஏற்ற மிக்கவர். ஆனால், இயற்கையில் எய்தும் முதுமையும் நமக்கு நம் உடலைப் பற்றிய உணர்வை அமைவாக அருமையாக உணர்த்தவே

செய்கின்றது.

66

-

-

ஒரு பொருளின் அருமை அதனை இழந்த போது தான் நன்கு உணரப்படும். அதுபோல இளமையின் பெரும் பயன் இளமை கழிந்த பின்னர்தான் கூர்மையாகப் புலப்படும்” என்கிறார் கா. சு.

உடல் நலம் இன்மையால் உண்டாகும் கேடுகள் அல்லது விளைவுகள் ஒன்றா இரண்டா? விரித்துரைக்கிறார் ஆய்வுச் செல்வர் கா. சு.

உடல் நலம் பெறா விட்டால் நாம் சுயாதீனம் அற்றவர்களாவோம். உணவு முதலிய ஒன்றையும் நாம் இனிது நுகர முடியாது; நமக்கு வேண்டுபவைகளை நாமே தேடிக் கொள்ளவும் இயலாது; நோயும் வசதிக் குறைவுகளும் உடம்பில் நிலைவரமாய் இருந்து கொண்டிருக்கும்; நம்மைச் சேர்ந்த வர்களுக்கு நாம் ஒரு சுமையாய் இருப்போம். சுகக் குறைவுள்ள உடம்பில் நோய் எளிதாகப் புகுந்து நிலை பெறுவதோடு பிறர்க்கும் அது எளிதாகப் பரவும். ஒரு நோயாளியினால் பல மனிதர்க்கு நோயும், பொருட் செலவும், துயரமும் ஏற்படுதல் கூடும் என்பது அது.

இவ்வடித்தளத்தை மனத்தில் கொண்டால்தான் துன்ப நீக்கமும், இன்ப ஆக்கமும் நிகழ்த்துதற்காம் கடமைகளை அழுத்தமாக எண்ணி அமைவாகச் செயல்பட முடியும் என்பதால் தோற்றுவாயிடத்தே இக்கருத்துகளை வெளியிட்டுள்ளார்

ஆசிரியர்.