உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

149

மூக்கின் வழியாகக் காற்றை இழுத்து மூச்சு விடுவதே முறைமை. ஆனால், சிலர் வாய் வழியாகவும் மூச்சு விடுகின்றனரே. குறட்டையின் போது வாய் வழிக் காற்றுத் தானே புகுகின்றது. இரண்டிற்கும் உள்ள காற்றின் வேற்றுமை என்ன?

மூக்கின் வழியே செல்லும் காற்று வெதுவெதுப்பும் ஈரமும் உடையதாகின்றது. வாய் வழியே உட்புகும் காற்று அவ்வாறாவது இல்லை. வாய் வழியே மூச்சு விடுவதால் இருமலும் கோழையும் உண்டாகும் என்கிறார்.

நம் உடம்பில் இருநூற்றாறு எலும்புகள் இருக்கின்றன என்றும், சிறு பிள்ளைகளின் எலும்பு மென்மையானது. ஆதலால், அவற்றை வடிவ மாற்றம் அடையாமல் பாதுகாக்க வேண்டுமென்றும் கூறுகிறார்.

பிறந்த குழந்தையை ஒரு பக்கமாகவே கிடத்தி வைத்தால் நெற்றியின் ஒரு புறம் புடைத்தும், மற்றொரு புறம் தட்டையாயும் வடிவுறுதல் கூடும். ஆதலால், சில மணி நேரங்களுக்கிடையில் அதன் கிடையை மாற்ற வேண்டும், நிற்கும் திறம் உண்டாவதற்கு முன் குழந்தையை நிறுத்தி வைத்தால் அதன் வளைந்து போம் என்கிறார்.

கால்கள்

விரல் எலும்புகளின் பொருத்துவாய் ‘கதவுக்கீல்கள்’ போல இருப்பதால் விரல்கள் கதவு போல முன்னும் பின்னுமாக அசைதல் கூடும். தோள் எலும்பின் பொருத்து ஒரு குழியில் ஒரு பந்தினை அமைத்தாற் போல் இருக்கும். அது, கையை வட்ட மாகச் சுழற்றுவதற்குத் துணை புரிகின்றது என்றும், எலும்புகள் இலேசாக உடைந்தால் தக்கவாறு மருத்துவம் செய்தவுடன் அவை வளர்ந்து பொருந்திக் கொள்ளும். மரத்தின் கிளைகளைப் போல அவை வளர்ந்து பொருந்துவன என்றும் கூறுகிறார்.

தசைத் தொகுதிகள் ஐந்நூறு இருப்பதையும், உடம்பின் பகுதிகளை அசைக்க உதவுவதையும் குறிக்கும் கா. சு. கொல்லு வேலை, தச்சு வேலை செய்வார் கை பெரிதாயும், வலுவாயும் இருப்பதையும், மலை வேலை செய்வார் கால் பெரிதாயும் திற மாயும் இருப்பதையும் எடுத்துக் காட்டித் தசைப் பயிற்சியின் பயனை விளக்குகிறார். “கருங்கைக் கொல்லர்” ‘வல்வில் ஓரி” என்னும் சங்க நூல் ஆட்சிகளை நினைவூட்டுகிறது இவ் விளக்கம்.

மூளையும் முதுகந்தண்டும் தொலைவரி (தந்தி) நிலையம் போலவும், நரம்புகள் தொலைவரி போலவும் அமைந்துள்ளமையை அருமையாக விளக்குகிறார் கா. சு.