உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

இளங்குமரனார் தமிழ் வளம் – 14

தோலைப் பற்றிக் கூறும் அவர், தோலின் மேலடுக்கு ஒன்றும், உள்ளடுக்கு ஒன்றும் இருப்பதைப் பலர் அறியாமல் இருக்கலாம் என்று கூறுகிறார். தோலின் அமைப்பு, பயன், பாதுகாப்பு என்பவற்றை விளக்கிக் கூறுகிறார். 'அற்றால் அளவறிந்து உண்க’ என்று கூறும் கா. சு. ளையர்க்கு ஏற்ற உணவு, முதியர்க்கு ஏற்ற உணவு, உயிர்ச்சத்து (Vitamin) உணவுத் தூய்மை என்பவற்றை விவரிக்கிறார். சிலர் வேலைகள் நெருக்கடியால் உண்ணும் உணவை நன்றாகச் சுவைத்து, மெதுவாக உண்ணாமையின், முதுமையில் உணவு வெறுப்பால் வருந்துகின்றனர் என்று சுட்டுகிறார்.

ஒரு நாளைக்கு உடலின் தேவை 5 படி நீர் (8 லிட்டர்) என்றும், ஒரு நாளைக்கு ஒரு படி நீருக்குக் குறையாமல் (11/2 லிட்டர்) உட்கொள்வது முதியவர்களுக்கு நன்மை பயக்கும். அதனால் மலச்சிக்கலும் நீங்கும் என்றும் கூறுகிறார்.

தேயிலை, காபி, வெறிநீர் (மது) என்பவற்றைப் பற்றி அறிஞர்கள் கருத்துகளை ஆய்ந்துரைக்கிறார் கா. சு. அவை:

வெறியுண்டாக்காத குடிகளுள் தேயிலையைச் சிலர் நல்லதென்கின்றனர். ஆனால், வாத நோயுடையவர்களுக்கு அது நல்லதன்று. அது அது மூளைக்குச் சில வேளைகளில் ஊக்க மளிப்பினும், சூடான தேயிலை நீர் செரிக்காமையை உண்டு பண்ணி வயிற்றைப் புண்ணாக்கும்.

தேயிலை உடலைப் பருக்க வைக்கின்றதென்றும், காப்பி அவ்வாறு செய்வதில்லை என்றும், காப்பி சிலவகை உணவுகள் செரிப்பதற்குத் துணை செய்கின்றதென்றும் சில அறிஞர்கள் கருதுகின்றனர்.

வெறிநீர் இயற்கையில் காணப் படாததொன்று, இயற்கையிற் காணப்படும் இனிய நீர் மனிதன் செயலால் புளிப்புற்றுப் பொங்கி வெறிநீர் ஆகின்றது.

வெறிநீரில் ஒரு புழுவையாவது இட்டால் அது உடனே செத்துப்போம்.

.

மீனையாவது

உணவென்பது, வயிற்றுள் சென்றதும், வயிற்றுக்குத் தீங்கு செய்யாமல் செரிக்கும். வெறிநீர், வயிற்றில் சென்றதும் வயிற்றுக்குக் கேடு செய்து செரிக்காமல் இரத்தத்தில் கலக்கும். வெறிநீர் உடலையும், அறிவையும் கெடுக்கும்.

நோய் நீக்கும் இயற்கை முறையில், கதிர் வெளிச்சம் படாத செடி வெளிறிப் போய் நோயடைகின்றது. கதிரொளி, மிக