உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

151

விரைந்து நோய் நுண்மங்களைக் கொல்கின்றது என்கிறார். காற்று, நீர் இவற்றின் தூய்மையையும் குறிக்கிறார்.

கால் முழுக்கு எனவும், முழுக்கு எனவும் நீராடலைப் பகுத்துக்கொண்டு ஆய்கிறார் கா. சு.

குளிர்ந்த நீரில் நனைத்துப் பிழிந்த ஒரு துணியை, வெந் நீரில் கால் வைத்திருப்பவர் நெற்றியில் போட்டு வைத்தால், அது கிறுகிறுப்பையும், தலைவலியையும் நீக்கும் என்கிறார்.

ஒரு காலத்தில் ஐரோப்பியத் துறவோர், உடல் முழுக்கு உடலைத் தூய்மைப் படுத்தினாலும் உயிரைத் தூய்மைப் படுத்துவதில்லை எனக் கருதினர். ஆனால், இக்காலத்தில் ‘கடவுட் சார்புக்கு அடுத்தபடி புனிதச் சார்பே என்னும் கருத்துப் பரவியுள்ளது என்று முழுக்கின் சிறப்பை உரைக்கிறார். தமிழர் தம் பழ வழக்கு ஈதென்றும் குறிக்கிறார்.

வெந்நீர்க் குளியைக் குறிக்கும் அவர், மாந்தரைத் தவிர மற்றை உயிர்கள் வெந்நீரை விரும்புவதில்லை என்கிறார்.

மணம் புரிந்தவர் மணம் புரியாதவரைப் பார்க்கிலும் நெடிய வாழ்வுடையவராய் உளர் என்று மேலை நாட்டிற் கணக்கெடுக்கப்பட்டுள்ளமை தெரிவிக்கிறார் கா. சு. மணம் புரிவதால் ஆண் மக்களுக்கு ஐந்து ஆண்டுகளும், பெண் மக்களுக்கு நான்கு ஆண்டுகளும் வாழ்நாள் நீடிப்பதையும் அக்கணக்குக் காட்டுதலை உரைக்கிறார். மேலும், முதுமைக் கேடு விரைவாகத் தொடங்குவதில்லை என்பதையும் சுட்டுகிறார்.

நடுப் பருவத்திலுள்ள மக்களுள் பலர், மணவாழ்க்கை நலன் அடையப் பெறாமல் இரத்த அழுத்தம் உடையவர் களாய்ச் சினம் அடிக்கடி தோன்றக் கூடிய மன நிலையுடன் வருந்துகின்றனர் என்பதையும் உரைக்கிறார்.

முதுமை என்பது ஆண்டைப் பொருத்ததன்று; உளத்தைப் பொருத்தது என விளக்குகிறார். முதுமையில் இளமைத் தன்மை தருவது விளையாட்டு என விளையாட்டு வாழ்க்கையில் சொல்கிறார். எதனையும் ஒருவன் தன் ஆற்றலுக்கு மேல் செய்தால் அவனுக்கு ஈரற்குலை (இருதய) நோய் உண்டாதல் கூடும் எனக் குறிக்கிறார். மிகவும் நுண்ணிய அறிவுக்கு எளிதா கக் கவலை ஏற்பட்டு விடும். இளமையில் உண்டாகிற அச்சம் முதுமை வரை தொடர்ந்து துன்புறுத்துகிறது. நாகரிக வாழ்க்கையில் ஏற்படும் அச்சங்களால் பைத்தியமும்,தற்கொலையும்