உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

இளங்குமரனார் தமிழ் வளம் – 14

மிகுகின்றன. அருளொழுக்கத்தாலும், அறிவாராய்ச்சியாலும் அவற்றைக் குறைக்கலாம் என்றும் கூறுகிறார்.

உண்ணும்போது

கடிதங்கள், இதழ்கள்

படிப்பது

கேடென்றுரைக்கும் அறிஞர் கா. சு. வயிற்றுள் நிகழ வேண்டிய இரத்த ஓட்டம் தலையில் நிகழும் என்கிறார்.

முதியவர்க்கும் நல்லுரை சில கூறுகின்றார்:-.

முதியவர்கள் வயது காரணமாக மாத்திரம் பிறர் மதிப்பை நாடுதல் நன்றன்று. பிறர் உதவியை அதிகமாக நாடாமல் தம் முயற்சியால் வாழ்தல் முதியர்க்கு மதிப்பை உண்டாக்கும். தேவைகளைக் கூடியவரை குறைத்துக் கொண்டு எளிய வாழ்க்கை நடத்துதல், பிறர் உதவியை மிகுதியாக நாடாமைக்கு ஏதுவாகும் என்பது அது.

மலச்சிக்கல் நீங்கினால் வாதநோய் நீங்கும் என்னும் குறிப்பைச் சுட்டுகிறார். குழந்தைப் பாதுகாப்பில், தாயின் கோபம் காரணமாகத் தாய்ப் பாலுக்கு நச்சுத் தன்மை ஏற்படு மாதலால், தாய் சாந்தமாயிருக்கும் போது பாலூட்டுதல் வேண்டும் என்கிறார்.

நினைவாற்றலால் நோய் நீக்கும் முறை என்பதில் நம்பிக்கையின் பயனை நன்கு வலியுறுத்துகிறார் கா. சு. குடிகாரர், குடியை ஒழித்தல் இயலாது” என்று எண்ணும் வரை அதை ஒழிக்க இயலாதவராவர்.

66

ஏதாவது ஒருநோய் நீங்க வேண்டுமானால் ‘அது நீங்குகிறது, நீங்குகிறது' என்ற சொல்லையே வேறொன்றும் கருதாது சொல்லிக் கொண்டிருந்தால், அவ்வெண்ணத்தைச் சித்தமானது ஏற்றுக் கொள்ளுமானால் உடனே நோய் நீங்கக் காணலாம். தனை ஒன்றி நினைத்தல்' எனவும், பாவனை எனவும் ந்நாட்டு நூல்கள் கூறும். கருட பாவனையில் தேர்ந்தவர் விடத்தை நீக்க வல்லவர் ஆகின்றனர். பன்முறை ஒரு கருத்தை ஒரு வகையாகத் தீர்மானித்த சொற்றொடரால் கூறுவதே மந்திர ‘உரு' எண்ணல் போலும் என்றும், ஒவ்வொரு நாளும் எல்லா விதத்திலும் 'நான் மேலும், மேலும் நலமடைகின்றேன்' என்று நம்பிப் பன்முறை சொல்லச் சொல்ல உடல் நோய் நீங்கி நலப்படுதலை அனுபவத்தில் கண்டுள்ளனர் என்றும் கூறுகிறார்.

உறங்கும்போது குழந்தைகட்கு அருகே சென்று நல்ல கருத்துகளை மெதுவாக ஒரே மாதிரிக் குரலில் கூறினால்