உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

153

அவ்வுரை அவர்கள் மனத்தைப் பண்படுத்தும் என்னும் அரிய செய்தியை உரைத்து எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார், திண்ணிய ராகப் பெறின்', என்னும் குறளொடு வாழ்க்கை இன்ப நூலை நிறைவிக்கிறார் அறிஞர் கா. சு.

உடல் நூல்: உடலின் பொது அமைப்பு, சுவாச நிகழ்ச்சி, நோய் வராது தடுத்தல், உடல் நலம் காக்கும், இணையறு வழிகள், உடல் உடல் நலம் நலம் பேணும் பொதுவிதிகள் என்னும் கட்டுரைகளைக் கொண்டது உடல் நூல் என்னும் பெயரியதாகும். இதனைப் ‘பாலாசி' புத்தக நிலையத்தார் 1985 இல் வெளி யிட்டுள்ளனர். கா. சு. அவர்களின் மருமகளார் சீதையம்மாள் உரிமை வழங்கியுள்ளார். பல்கலைச் செல்வர் கா. சு. இலக்கிய குழு நிறுவனர் மீ. சு. இளமுருகுபொற் செல்வி அவர்கள் நூல் வெளியிடத் துணை புரிந்துள்ளனர்.

அறிவு விளக்கம்; அறிவு விளக்கம் என்னும் நூல் கழகத்தின் 59 ஆம் வெளியீடாக 1925 இல் வெளிவந்துள்ளது. கடவுள், உயிர், உலகம், உலகப் பகுப்பு, சமயம், நன்மை தீமை, ஒழுக்கம் - நல்லியல்பு, நற்பழக்கம், கல்வி, நூற்பரப்பு. தமிழ் என்னும் பதினொரு கட்டுரைகளையுடையது அந்நூல். அதனை மாண வரை நோக்கி ஆசிரியர் எழுதினார் என்பது பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் மோ. கந்தசாமி முதலியார் வழங்கியுள்ள முகவுரையால் விளங்குகின்றது. தமிழர் சமயம், சைவ சித்தாந்த வரலாறு. சைவ சித்தாந்த உண்மை என்னும் நூல்களில் இந்நூற் கருத்துகள் பலவும் விளக்கப்பட்டுள்ளன. அக் கட்டுரைகளில் கண்டு கொள்க.