உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகப் பெருமக்கள்

இப்பெயரில் முதற் புத்தகம், இரண்டாம் புத்தகம் என இரு தொகுதிகள் வெளிவந்தன. இவை முறையே 230, 258 என்னும் வெளியீடுகளாகக் கழகத்தின் வழியே வெளிவந்தன. இவற்றின் முதற்பதிப்பு ஆண்டு முறையே 1939, 1940 ஆகும்.

பண்டைக் காலத்தில் இருந்த பெருமக்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பது ஒரு முறை; இக்காலத்திற் சிறந்து விளங்கும் பெருமக்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பது மற்றொரு முறை. இவ்விரண்டனுள்ளும் பின்னதே இக்காலத் தேவைகளுக்கு ஏற்பச் சீரிய முறையாகக் கருதப் பட்டு வருகின்றது. என்னும் கருத்தில் நூல் எழுதிப் பதிப்பிக்கப்பட்ட செய்தி பதிப்புரையில் சுட்டப்பட்டுள்ளது.

இருப்பாரை வரலாற்றில் பொறித்தல் உலகியற்கையில் அரிது. மறைந்த பின்னர் வரலாற்றில் இடம் பெறச் செய்தலே பொது வழக்கு. அவ்வழக்கைக் கருதாமல், வாழும் பெருமக்கள் வரலாற்றைத் தொகுத்து வரைந்த அறிஞர் பல்கலைச் செல்வர் சான்றோர் கா. சு. அப்பேற்றைத் தாம் தமிழ் மண்ணில் பெற்றார் அல்லர். பின்னரும் அப்பேற்றை முழுமையாகப் பெற்றார் அல்லர். தக்கவர்களை மதிப்பதில் தமிழ்மண் உலகத்தில் மிகமிகப் பின் தங்கியது என்பது உறுதிப் படுத்தப் பட்டுக் கொண்டே வருகின்றது.

முதற்புத்தகத்தில் உலகப் பெருமக்கள் எழுவரும். இரண்டாம் புத்தகத்தில் எழுவரும் ஆகப், பதினால்வர் வரலாறு இத்தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன. முன்னது 156 பக்க அளவிலும், பின்னது 164 பக்க அளவிலும் அமைந்துள்ளன.

66

ஆகாகான், திவாலரா, ஹாவெலாக் எல்லிஸ், ஸ்டாலின், டேவிட் லாயிட் ஜியார்ஜ், ராம்சே மாக்ட னால்ட், முசோலின்" என்பார் வரலாறுகள் முதல் நூலில் சுருக்கியுரைக்கப் படுகின்றன.