உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

>இளங்குமரனார் தமிழ் வளம் – 14

பணியும் அந்நாள் சட்டத் துறைத் தலைவர் சர். சி. பி இராமசாமி ஐயரால் நீங்கிற்று! சட்டத் துறைப் புலமை வளம் திசை மாறியது; தமிழைச் சார்ந்தது. இதனால்தான், “எம். எல். பிள்ளையின் வாழ்க்கை நீதியுலகுக்குப் பயன்படாது ஒழிந்தமை அவ்வுலகின் துரதிர்ஷ்ட மென்றே சொல்வேன் என்று

திரு. வி. க. தம் வாழ்க்கைக் குறிப்பில் பொறித்து இரங்கினார்.

·

தந்தையாரின் அழுந்திய சைவக் கோட்பாடும் வழிபாட்டு முறையும் இளமையிலேயே கா. சு. விற்குப் பயின்றமைந்தன. தந்தையார்க்குப் பெருந் தொடர்பினர்களாக விளங்கிய செப் பறைச் சிதம்பர அடிகள், திருப்பதிசார அடிகள் என்பார் உறவும் அவர்கள் வழியே பெற்ற இலக்கண சமயப் புலமைகளும் இளமையிலே மூதறிவராகச் செய்தன. அவ்விளமையிலேயே உடையவர் பூசையை மேற்கொள்ளவும் ஆனார். அதனால் ‘பூசைப்பிள்ளை' எனவும் 'Bellman' எனவும் வழங்கப்பட்டார். பூசைத் திறங் கொண்டே தம் பூவையை மணந்து தந்தார் இவர்தம் மாமனார் என்பதும் கருதத் தக்கது. இவையெல்லாம் கா. சு. வின் சைவ சமயப் பெருநிலை விளக்கத்திற்குக் களங்களாகத் திகழ்ந்தவை.

நெல்லையில் உயர்நிலை வகுப்பில் படிக்கும் காலத்திலேயே சைவ சித்தாந்த சங்கம் கண்ட இளவளச் சுடர் கா. சு., இதன் உறுப்பினர் பன்னிருவர். ஒத்த அகவையுடையரையும் ‘அவர்கள் இவர்கள்' என்றுதான் வழங்க வேண்டும் என்பதும் 'காபி குடியாமை’ ‘படம் பாராமை' ‘குடுமி வைத்தல்' என்பனவும் சில கொள்கைகள். 'திட ஞானியார்' என்னும் ஆய்வு கொண்டு "சிவஞான முனிவரும், குமரகுருபரரும் அன்னவர் அவர்” என முடிபு அக்காலையிலேயே செய்தனர் என்னின் ஆய்வுத் திறம் அறியவரும்.

சென்னையில் பயின்ற நாளில் 'நண்பர் சங்கம்’ நிறுவியவர் கா. சு. கிழமை ஒரு முறை கூடும் அமைப்பு அது. அதன் உறுப்பினர் நால்வர். அதன் தலைவர் கா. சு. தமிழ்ப் பொழிவர் சொல்லின் செல்வர் இரா.பி. சேது; ஆங்கிலப் பொழிவர் சண்முக நயினார்; வாரச் செய்திப் பொழிவர் பஞ்சாபகேசர் என்பார். அப்பொழுது கா. சு. எண்வகை நினைவுக் கலை எனும் அட்டாவதானம் செய்து பழகினார்.

மயிலாப்பூரில் 'திருவள்ளுவர் கழகம்' நிறுவி திருக் குறள் சொற்பொழிவு செய்தவர் கா. சு. சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் என்னும் உயர் அமைப்பின் தலைவர் கா. சு.