உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கிய வரலாறு

தமிழ்க் 'கா. சு.’ வரைந்த இலக்கிய வரலாறு தனிப் பெருஞ்சிறப்பினது. அது, இலக்கிய வரலாறுகளின் நற்றாய்; வளர்ப்புத் தாயாம் செவிலித்தாய்! இலக்கிய ஆய்வின் கட்ட ளைக்கல்; வரைபடம். காசுவின் தமிழ்த்தொண்டை உலகறியச் செய்த கலங்கரை விளக்கம்.

நோக்கம்

1930 ஆம் ஆண்டிலே வெளிப்பட்ட இலக்கிய வரலாற்றின் முன்னுரைக் கண் தாம் இலக்கிய வரலாறு எழுத நேர்ந்த நோக்கத்தைத் தெளிவிக்கிறார்.

நமது தமிழ் மொழிக்குச் சுருக்கமாயதோர் அழகிய இலக்கிய வரலாறு திருவாளர் M. S. பூரணலிங்கம் பிள்ளை அவர்களால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழிலே சுன்னாகம் குமாரசுவாமிப்புலவர் எழுதிய புலவர் சரித்திரம் காலமுறைக்கேற்ப எழுதப் படவில்லை. தக்க புலவர்கள் சிலரைப் பற்றிய குறிப்பும் அதன் கண் காணப்படுமாறில்லை. சபாபதி நாவலர் அவர்களது திராவிடப் பிரகாசிகை என்னும் நூலும் சிறந்த சில இலக்கியங்களின் இயல்பையே தொகுத்து இயம்புகின்றது. அதனை ஓர் இலக்கிய வரலாறு என்று முற்றிலும் கருத டமில்லை. தஞ்சைத் திருவாளர் சீனிவாசபிள்ளை அவர்கள், தமிழ் வரலாறு முற்றுப் பெறாமையானும் அவர் கொள்கைகள் சில ஒவ்வாமையானும் அதனின் வேறாய ஒரு தமிழிலக்கிய வரலாறு இன்றியமையாததாயிற்று. தமியேனினுஞ் சிறந்த முறையில் எழுதத் தக்க அறிஞர் அம்முயற்சியை மேற் கொள்ளாமையால் எனது குறைவு பட்ட தமிழறிவுக்கு எட்டியவரை இத் தமிழிலக்கிய இத் தமிழிலக்கிய வரலாற்றினை எழுதத் துணிந்தனன். இதன்கட் குறைபாடுகள் பல உள்ளன எனினும் அவற்றை அறிஞர் ஆராய்ந்து திருத்தமான கொள்கைகளை வெளியிடுதற்கொரு வாயிலாக இந்நூல் இப்போது வெளி யிடப்படுகின்றது.