உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளியீடு

தமிழ்க் 'கா.சு.' கலைக்களஞ்சியம்

11

இலக்கிய வரலாறு 516 பக்கங்களாகவும், முதற்பகுதி, இரண்டாம் பகுதி என இரண்டு பாகங்களாகவும் (1-272; 273-516) வெளி வந்தது. சென்னை, பவழக்காரத் தெரு. ஆசிரியர் நூற் பதிப்புக் கழகம் இத் தமிழ்க்கொடையை வழங்கியது. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகஞ் சார்ந்த அப்பரச்சகத்திலே நூல்

அச்சிடப்பட்டுள்ளது.

பதிப்புரையில் 'உண்மை காணும் வேட்கையோடு ஆய் வார்க்கும் நூல்களின் சிறப்புணர்ந்து கற்பார்க்கும், கற்பிப் பார்க்கும் அம்முறையின் நூல் யாப்பார்க்கும் சிறந்த வழி காட்டியாம்' என்றுள்ள செய்தி மெய்ம்மை என்பதைத் தமிழ் இலக்கிய வரலாறுகளை ஆய்வார் நன்கு அறிவர்.

இலக்கிய வரலாற்றுச் செய்தி கால வரன்முறையில் எவ்வாறு இயல்கின்றது என்பதும் முன்னுரையிலேயே நூலின் முழுப் பிழிவாக எழுதப்பட்டுள்ளது.

முதற்கண் தமிழர் வரலாற்றினைச் சுருங்கக் கூறிய பின்னர்த் தலைச் சங்க நூலாகிய அகத்தியமும், இடைச் சங்க நூலாகிய தொல்காப்பியமும் ஆராயப்பட்டன.

பின்னர்க் கடைச்சங்க காலத்துப் புலவர் வரலாற்றினை இயம்புமிடத்தே பரணர், கபிலர், நக்கீரர் என்னும் மூன்று பெரும் புலவர்கள் வெவ்வேறு காலத்தினர் எனவும், ஒருவர்க்குப் பின் ஒருவராய்த் திகழ்ந்தனர் எனவும் முடிவு கட்டப்பட்டது. அக்காலத்து மூவேந்தர் வரலாறும் அன்னோர் காலத்துப் புலவர் பாடல்களும் ஒரு சிறிது தொகுத்துரைக்கப்பட்டன.

கி.பி.

கடைச்சங்க காலம் கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் முற் பகுதியோடு முடிவடைகின்றது. கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் நான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியின் முடிவு வரையில் உள்ள காலம் மாணிக்கவாசகர் காலத்தைச் சார்ந்த வரலாற்றுப் பகுதிக்குரியதென்று கருதப்பட்டது.

அதற்குப்பின் ஆறாம் நூற்றாண்டு வரை சமண காலம் கணிக்கப்பட்டுள்ளது. அக்காலத்தே சமணருடைய கீழ்க் கணக்கு நூல்களும் பெருங்கதை என்னும் காப்பியமும் எழுந்து நிலவின. ஆறாம் நூற்றாண்டிலேயே மூர்த்தி நாயனார் மதுரையில் அரசாட்சி எய்தின காலம் முதல் சைவ நூல்கள் தழைத் தோங்கின.