உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

>இளங்குமரனார் தமிழ் வளம் – 14

பின்னர் ஏழாம் நூற்றாண்டு எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் ஒன்பதாம் நூற்றாண்டின் முடிவு வரை வைணவ ஆழ்வார் காலமாகும்.

பத்தாம் நூற்றாண்டிலே சமணக் கிளர்ச்சி மீண்டும் தொடங்கிச் சிந்தாமணி முதலிய சைனப் பெருங் காப்பியங்கள் எழுந்தன. பத்தாம் நூற்றாண்டே சைவர்களது திருவிசைப் பாக்காலம்.

பத்தாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாவது நூற்றாண்டு வரை தமிழ்ப் பெருங்காப்பியக் காலமாகும்.

பன்னிரண்டு முதற் பதினான்காவது நூற்றாண்டு வரை தொல்காப்பிய உரையாசிரியர்கள் காலமாகும்.

பதின்மூன்றாவது நூற்றாண்டுடன் சமணரியக்கம் குன்றி ஒழிந்தது. கி. பி. பதின்மூன்று முதல் பதினாறாவது நூற்றாண்டு வரை வைணவ மணிப்பிரவாள உரைக்காலமாகும். அருணகிரி நாதரும் வில்லிபுத்தூரரும் சந்த விருத்தங்களின் பொருட்டு வட சொற்களை மிகுதியும் ஆண்டமையால் வடமொழித் தாக்கு மிகுதிப் பட்ட காலம் இதுவேயாகும்.

கி. பி. பதினாறு முதல் கி. பி. பதினெட்டு முடிய சைவா தீனத்தார் காலமும் தல புராணக் காலமுமாகும்.

கி. பி. பதினேழாவது நூற்றாண்டில் முறையே மகமது சமயக் கருத்துகளும், கிறித்துவ சமயக் கருத்துகளும் தமிழிற் கலந்தன.

பதினெட்டாவது நூற்றாண்டு முதல் தற்கால உரை நடை

நூற் காலம் தொடங்கிற்று.

பத்தொன்பதாவது நூற்றாண்டிலே ஆங்கிலச் சார்பு தமிழ்க்கண் மிகுந்து பொது நோக்கம் சிறப்புற்றது.

இருபதாவது நூற்றாண்டிலே புதிய வரலாற்று ஆராய்ச்சி முறை தொடங்கிற்று.

இதுகாறும் கூறிய காலப்பகுதிகளில் எழுந்த நூல்களின் வரலாறும் புலவர் வரலாறும் மிகச் சுருக்கி இதனுள் வரையப் பட்டுள்ளன.

தமிழர் யார் என வினவி அவர் இந்நாட்டவரே என உறுதிப் படுத்துகின்றார். தமிழர் வெளி நாட்டில் இருந்து