உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் 'கா.சு.' கலைக்களஞ்சியம்

13

வந்தவர் என்றால் அவர் வருமுன் வேறுமொழியர் இந் நாட்டில் இருந்ததற்குச் சான்று இல்லை. தமிழர் வெளி நாட்டவர் என்றால், அவர் அவ் வெளி நாட்டிற்கு எந்நாட்டில் இருந்து போயினர் என்னும் வினா எழும். தென்னாடு, மக்கள் முதல் முதல் தோன்றிய இடம் என அறிஞர்களால் உறுதி செய்யப் படுவதால் அத்தென்னாட்டில் இருந்து கடல் கோளின் பின்னர் படிப்படியே வடக்கே பரவியவரும், உலகளாவப் பிரிந்து சென்றவரும் தமிழரே என உறுதி செய்கின்றார். கா. சு. தமிழர் தம் கடற் செலவுத் தேர்ச்சியையும் ஆரியர் அஃதறியாமையையும் விளக்கிப் பணியர் என்பார், தமிழ் வணிகரே எனத் தெளிவிக்கிறார் (14).

இறையனார் களவியலுரை கூறுமாறு, “முச்சங்க காலம் சோதி வட்டக் கணக்குப்படி கூறப்பட்டது” என்று கூறும். கா. சு. ‘கதிரவனோடு ஒரே நேரத்தில் கிழக்குத் திசையில் சோதிமீன் 1480 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றுமென்று வானியல் நூலார் கூறும் கருத்தை முன் வைக்கிறார். களவியலுரைகாரர் சாத்திரமானப்படி (மாதத்திற்கு 30 நாள்) சோதி வட்டத்தின் ஆண்டுகளைக் கணித்து, அதன்படியே முச்சங்க காலங்களைக் கணக்கிட்டார் என்கிறார். முதற்சங்கம் மூன்று சோதி வட்டம் இரண்டாம் சங்கம் 21/2 சோதி வட்டம், மூன்றாம் சங்கம் 11/4சோதிவட்டம் என்று கூறி இது புனைந்துரையன்று என முடிக்கிறார் (25).

அகத்தியர் நூலியற்றுவதற்கு முன் வேறு தமிழ் நூல் இருந்தது என்றும், நூல் என்றது இலக்கணம் என்றும் சுட்டுகிறார் (41). அகத்தியர் நூற்பா எனப் படுபவற்றைத், “தொல் காப்பிய நூற்பாவொடு ஒத்து நிற்கவில்லை” என்றும் (50), சொன்னடையையும் பொருள் நடையையும் நோக்குமிடத்து அகத்தியரை வழிபட்டோரால் அவை நெடுங்காலத்திற்குப் பின் இயற்றப்பட்டிருத்தல் கூடுமென்றும்” குறிக்கிறார் (51).

தமிழ் மொழிக்குரிய தமிழ் என்னும் பெயர்தானும் தமிழில்லை என்பார்க்கு, இம்மொழிக்கு இம்மொழியிலேயே பெயரமையாது சேய்த்தாய்ப் பிறிதொரு மொழியிற்றான் பெயரமைந்திருத்தல் கூடுமென்பது அறிவிற்குப் பொருத்தமில்லாத தொன்று” என்று மறுப்புரைக்கிறார் (52)

சிலர் தொல்காப்பியம் என்பது தொல், காப்பு, இயம் என்னும் மூன்று சொற்களால் ஆயதெனக் காண்டு பழமையாகிய மொழிப் பாதுகாப்பு நூலென்றும் அதற்குப்