உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

இளங்குமரனார் தமிழ் வளம்

14

பொருள் கூறுகின்றார்கள். அங்ஙனமாயின் நூலை வைத்தே ஆசிரியர்க்குப் பெயர் ஏற்பட்டிருத்தல் வேண்டும் எனக் கருதி உரைக்கிறார் (59)

வருணன் என்னும் நெய்தல் நிலத் தெய்வப் பெயர் வண்ணன் என்றிருந்திருக்க வேண்டும் என்னும் கா. சு.“வண்ணன் மேய தண் மணல் உலகம்” என்ற பாடபேதம் "ஓரேட்டிலுள்ளதாக இப்போது கேள்வி” என ஒரு கருது கோளையும் வைக்கிறார் (74).

முத்தமிழ்ப் பகுப்புண்மை, 'இசையொடு சிவணிய நரம் பின் மறைய’ என்றும் ‘நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்’ என்றும் தொல்காப்பியத்து வருதலால் தொல்காப்பியர் காலத்திற்கும் முற்பட்டே அமைந்ததாகும் என்கிறார் (87)

கடை ச் சங்க காலத்தைக் களவியல் உரை கூறுவது கொண்டு கி. மு. 1600 முதல் கி. பி. 250 வரை எனக் கொள்கிறார். என்றும்,

சேரருள் முன்னவன் உதியஞ்சேரலாதன் அவன் கி.மு 12 ஆம் நூற்றாண்டாகிய பாரத காலத்தவன் என்றும் கூறும் கா. சு. இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் ‘யவனரைப் பிணித்தவன்' என அறியப் படுதலால் அவன் கி. மு.328 இல் கி.மு.328 ஆட்சி புரிந்தவன் ஆகலாம் என்றும், அவன் தந்தை உதியஞ் சேரல் அதற்கு முற்பட்டவன் என்றும் கூறுகிறார். இவ்வாறு சங்க கால வேந்தர்களையும் புலவர்களையும் கால ஆய்வு செய்கின்றார் (92-105)

وو

“தமிழர் நெஞ்சப் பாங்கும் இலக்கியப் போக்கும் என்னும் தலைப்பில் (106-120) நூற்றாண்டு வாரியாக இலக்கிய வரலாற்றுச் சுருக்கத்தை அமைக்கிறார். கடைச் சங்கப் புலவர் வரலாறு, கடைச்சங்க நூல்கள் என்னும் ஆய்வுடன் முதற்பாகம் (120-269) நிறைவடைகின்றது.

கபிலருக்கும் நக்கீரருக்கும் முற்பட்டவர் பரணர் என்பது கா. சு வின் ஆய்வு முடிவு (138). மேலும் மாமூலனார், கழாத் தலையார், பரணர் ஆகியோர் முறையே ஒருவர் பின் ஒருவராக வாழ்ந்திருந்தனர் என்கிறார் (141).

ஈழத்துப் பூதன் தேவனார், வெள்ளெருக்கிலையார் மதுரைக் கணக்காயனார் முதலியோர் பரணர் காலத்தவர் என்பதைப் பாடப்பட்டோர் கொண்டு ஆய்ந்து நிறுவுகிறார். இவ்வாறு உடன் காலப் புலவர்களை ஆங்காங்குச் சுட்டுகிறார்.