உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் 'கா.சு.' கலைக்களஞ்சியம்

15

முத்தொள்ளாயிரம் 2700 பாட ல்களைக் கொண்டது என்றும் சங்க நூல் என்றும் கொள்கிறார். சேரமான் மா வெண்கோ, இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளி, உக்கிரப் பெருவழுதி முதலிய வேந்தர் மூவரும் ஒத்து வாழ்ந்த காலத்து இயற்றப்பட்டிருக்கலாம் என்று கூறும் கா. சு. அதன் காரணம் குறித்தாரல்லர். இம்மூவேந்தரும் ஒருங்கிருந்த காட்சியை ஔவையார் முத்தீக்கு ஒப்பிட்டு வாழ்த்திய புறப்பாடலைக் கொண்டு முத்தொள்ளாயிரம் அவர் மூவரையும் பாடியதாகக் கருதினார் எனலாம் (231-2)

சிலப்பதிகாரம், மணிமேகலை இவற்றொடு திருக்குறளையும் இத்தொகுதியில் ஆய்ந்துரைக்கும் கா. சு. ஏனைக் கீழ்க்கணக்கு நூல்களைப் பெயரளவில் சுட்டி அமைகின்றார். திருக்குறள், கடைச்சங்க நூல்கள் யாவற்றுக்கும் முன்னதாக இயற்றப் பட்டது என்றும் கூறுகிறார்.சிலப்பதிகாரத்திற்கு 250 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் கூறுகிறார்.

இரண்டாம் பகுதி மாணிக்க வாசகர் கால ஆராய்ச்சியுடன் தொடங்குகிறது. கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியே அடிகள் காலம் என்கிறார். பாவமைதி, சொல்லமைதி கொண்டு தேவாரத்திற்கு முற்பட்டது திருவாசகம் என்னும் முடிவுக்கு வரும் கா. சு. ஞானசம்பந்தர் காலத்தில் தில்லைக்கு அருகில் கட ல் விலகியிருந்தமையும், மாணிக்க வாசகர் காலத்தில் நெருங்கியிருந்தமையும் அகச்சான்றாகக் காட்டி விளக்குகிறார்

(274).

கார் நாற்பது முதலிய கீழ்க்கணக்கு நூல்கள் சமணர் ஆட்சிக் காலம் (4, 5 ஆம் நூற்றாண்டு) எனத் தெளிகிறார் (280-307). பெருங்கதை, திருமந்திரம் ஆகியனவும் இக்காலத்ததென முடிக்கிறார். தேவாரக்காலம் (4-8 நூ. ஆ) ஆழ்வார் காலம் (8-9 நூ. ஆ) திருவிசைப்பாக்காலம் (10-11 நூ. ஆ) பற்றி ஆயும் கா. சு. சித்தரும் சித்தர் நூலும், பதினோராம் திருமுறை என்னும் தலைப்புகளில் வரைகிறார்.

கா.சு.

சித்தர் நூல்கள் எளிய தெளிவான பேச்சு நடையில் எழுதப் பட்டிருப்பதால், அவற்றுட் கணக்கில்லாதன சொன்ன யந்தேரும் புலவராற் பாதுகாக்கப்படாது இராமபாணத்திற்கும் கறையானுக்கும் இரையாய்க் கழிந்தொழிந்தன. இருப்பவற்றைக் கோவை செய்து செம்மையாக அச்சிடுதற்குரிய முயற்சியைத் தமிழ்ச் செல்வர் விரைவிற் கடைப் பிடிக்கக் கடவர் என்கிறார்

(343 -4)