உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

இளங்குமரனார் தமிழ் வளம் 14

சீவக சிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம், மேரு மந்தர புராணம், வளையாபதி என்பனவும், யாப்பருங்கலம், என்பனவும்,யாப்பருங்கலம், நேமிநாதம், நன்னூல், நம்பியகப்பொருள் என்பனவும், அறநெறிச் சாரம், திருநூற்றந்தாதி, திருக்கலம்பகம், திவாகரம், பிங்கலம் ஆகியனவும் சமணரது நூற்கிளர்ச்சிக்காலம் என்னும் பகுதியில் சார்ந்தன என அடக்குகிறார் (10 -13 நூ. ஆ). இக்காலத்ததே குண்டலகேசி, வீரசோழியம், பன்னிரு பாட்டியல், பஞ்சமரபு, பரத சேனாபதீயம் என்பனவும் என்கிறார்.

சைவக் காப்பியக் காலத்தில் (11,12ஆம் நூ: ஆ) கலிங்கத்துப் பரணி, பெரியபுராணம், கந்த புராணம் முதலிய நூல்கள் கிளர்ந்தன. ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர். ஔவையார், பொய்யா மாழிப்புலவர், சத்திமுற்றப் புலவர், கம்பர் முதலியோர் க்காலத்திருந்த புலமைச் செல்வர்கள். பழைய திருவிளையாடற் காலம் கி. பி.1267 என்று கல்வெட்டுச் சான்றால் மெய்ப்பிக்கிறார். தண்டியலங்காரத்தின் காலம், இராசேந்திரசோழன் கால மென்றும் (1012 - 32) கூறுகிறார்.

உரையாசிரியர் காலப்பகுதியில் இளம்பூரணர் 11 ஆம் நூற்றாண்டின் இறுதியிலாவது, பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலாவது வாழ்ந்திருத்தல் கூடும் என்று கூறும் கா. சு. இளம்பூரணர் என்ற பெயர் முருகக் கடவுளதென்பர் என்கிறார் (385) ஆதலால் சைவர் என்று தெளிகிறார். பேராசிரியரின் திருக் கோவையார் உரை கொண்டு அவரும் சைவர் என முடிவு செய்கிறார். இளம்பூரணரின் தொல்காப்பிய உரை முற்றாகக் கிடைத்திருக்கவும், ‘எழுத்திற்கும், சொல்லிற்கும், பொருளதி காரத்தின் ஒரு பகுதிக்கும் அகப்பட்டுள்ளது” என்கிறார்.

சேனாவரையர் படைத்தலைவர் குடியினர் என்றும், அவர் கி. பி. 1280 இல் உயிர் நீத்தனர் என்றும், இவர்க்குப் பின்னவர் நச்சினார்க்கினியர் என்றும் கூறுகிறார். பரிமேலழகர் போசராசனுக்குப் பிற்பட்டவர் என்றும், காஞ்சிபுரம் அருளாளப் பெருமாள் கோயில் கல்வெட்டில் இவர் பெயர் காணப்படுவதால் இவர் காலம் கி. பி. 1272 என்றும், இவர் சேனாவரையர் காலத்தவர் என்றும் கூறுகிறார் (386, பரிமேலழகருக்குப்பின் சிவஞானமுனிவர் ஒருவரே பெரிய உரையாசிரியராகத் திகழ்ந்தனர்

என அறுதியிடுகிறார்.

வைணவ உரையாசிரியர்கள் மணிப்பிரவாள நடையில் உரை இயற்றிய காலந்தொட்டு வடசொற்கள் பெரு வெள்ளமாகப் பரவியதையும், இற்றை நாளிலேயும் ஆங்கில நூல்களைத்