உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

Fr.,

66

17

தமிழில் மொழி பெயர்ப்பவர் மிகுந்த வட சொற்களைப் புகுத்தி வருவதையும் சுட்டும் கா. இது தடைப் படுதற்குரிய முயற்சிகளைத் தமிழ்வாணர் கைக் கொள்ளவேண்டும்' எனத் தூண்டுகிறார் (287).

நாதமுனிகள், ஆளவந்தார், இராமானுசர், திருக்குருகைப் பிரான் பிள்ளான் கூரத்தாழ்வார், பராசர பட்டர், நஞ்சீயர், பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப்பிள்ளை, வேதாந்த தேசிகர், பின்பழகிய பெருமாள் சீயர், பிள்ளை லோகாசாரியார், அழகிய மணவாளநயினார், விளாஞ்சோலைப் பிள்ளை, அழகிய வரதர், பிள்ளைப் பெருமாளையங்கார் என்பாரைப்பற்றிய செய்திகள், உரைகள் ஆகியன இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன.

பதினான்காம் நூற்றாண்டுக்கு மேற்பட்ட காலத்தைத் தத்துவ நூல்கள் கிளர்ந்த காலமாகக் கருதும் கா. சு. பதினைந்து முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை நூற்றாண்டு வாரியாக எழுதிச் செல்கிறார்.

மெய்கண்டாரது சிவஞானபோதம் தொடங்கியுண்டாகிய மெய்ப்பொருள் நூல்களை விளக்கும் கா. சு, சைவ மடங்களின் பணியையும் உரைக்கிறார். திருவாவடுதுறை, தருமபுரம் என்பவை சிறப்பிடம் பெறுகின்றன.

ம்

காளமேகப்புலவர், இரட்டையர், அருணகிரிநாதர், வில்லி புத்தூராழ்வார் என்பார் பதினைந்தாம் நூற்றாண்டிலும், அரிதாசர், குருகைப் பெருமாள் கவிராயர், மறைஞான சம்பந்தர், அனதாரியப்பர், நிரம்ப அழகிய தேசிகர், பரஞ்சோதி முனிவர், அதிவீரராமபாண்டியர், வரதுங்கராம பாண்டியர் மனைவியார், திருவொற்றியூர் ஞானப் பிரகாசர், குகைநமச்சிவாயர், இரேவண சித்தர், ஆறுமுக சுவாமிகள் என்பார் பதினாறாம், நூற்றாண்டிலும் வாழ்ந்தவர்களாகக் குறிக்கப் படுகின்றனர்.

பதினேழாம் நூற்றாண்டின் முற்பாதியில் பிள்ளைப் பெருமாள் ஐயங்காரும், சைவ எல்லப்ப நாவலரும், குமர குருபரரும் தத்தம் சமயங்களை நிறுவுதலில் தலை நின்றமையும், பிற்பாதியில், அமிர்தகவிராயர், அழகிய சிற்றம்பலக் கவிராயர், அந்தகக்கவி வீரராகவர், அரச கேசரி, சிவப்பிரகாசர், சொக்க நாதப்புலவர், வைத்திய நாத நாவலர், ஈசான தேசிகர், சுப்பிரமணிய தீட்சிதர், படிக்காசுப் புலவர் முதலியோர் விளங்கி யமையும் குறிப்பிடுகிறார்.