உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

இளங்குமரனார் தமிழ் வளம் – 14

வர்

சுவாமிநாத தேசிகர் இலக்கணக் கொத்து என்ற தமது நூலில், தமிழைச் சற்றிழித்துக் கூறினமையால், வரலாற்றுணர்ச்சியில்லாமல் வடமொழிப்பற்று மிகையு முடையவர் என்பது தெளியப்படும்” என்றும், திரிபுணர்ச்சியும், ஒரு பாற்கோடிய பற்றும் உடையர் என்றும் இவர் கூறுவது எண்ணத்தக்கது. இது தமிழ்க் கா. சு. என்பதுடன் நடுவாயும் காசு சட்டப் பேரறிஞர் என்பதையும் நாட்டுவது (430 -1)

பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சாந்தலிங்க, கோனேரியப்பர், கண்ணுடைய வள்ளல், பலபட்டடைச் சொக்கநாதப் புலவர், மதுரகவிராயர், வீரமாமுனிவர், தாயுமானவர், நமச்சிவாயப் புலவர், ஒப்பிலா மணிப்புலவர், அருணாசல கவிராயர், பகழிக் கூத்தர், சொக்கப்ப நாவலர் முதலியோர் வாழ்ந்து தமிழ்த் தொண்டு செய்ததும், பதினெட்டாம் ாம் நூற்ாண்டின் பிற்பகுதியில் சிவஞான முனிவரர், கடவுண் மாமுனிவர், கச்சியப்ப முனிவர், தொட்டிக் கலைச் சுப்பிரமணிய முனிவர், சங்கரமூர்த்தி கவிராயர், வண்ணக் களஞ்சியப் புலவர், கந்தப்பையர் முதலியோர் தொண்டு செய்ததும் விளக்கப்படுகின்றன.

ஆங்கிலச் சார்புக் காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டாகவும் தற்காலம் இருபதாம் நூற்றாண்டாகவும் ஆயப்பட்டுள்ளன. சரவணப் பெருமாள் கவிராயர், இராமானுச கவிராயர், வேதகிரி முதலியார், வீரராகவ முதலியார், இராமச்சந்திர கவிராயர், ஆண்டான் கவிராயர், மாம்பழக் கவிச்சிங்க நாவலர், தாண்டவராய முதலியார், விசாகப் பெருமாளையர், சரவணப் பெருமாளையர், ஆறுமுக நாவலர், இராமலிங்க அடிகளார், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, முருகதாச அடிகள், பொன்னுசாமித் தேவர், பாண்டித்துரைத் தேவர், அழகிய சொக்கநாத பிள்ளை, கிருட்டிண பிள்ளை, சுந்தரம் பிள்ளை, கால்டுவெல் ஐயர், போப்பையர், அண்ணாமலை ரெட்டியார், வீராசாமிச் செட்டியார், சபாபதி நாவலர், சோமசுந்தர நாயகர், தாமோதரம் பிள்ளை முதலியோர் இலக்கியப் பணிகள், ஆங்கிலச் சார்புக் காலப் பணிகளில் ஆயப்பட்டுள்ளன.

சுப்பிரமணிய பாரதியார், அரசஞ்சண்முகனார், சூரிய நாராயண சாத்திரியார், செல்வக்கேசவராய முதலியார், பூவை கலியாணசுந்தரயதீந்திரர், அ. குமாரசாமிப் புலவர், செந்தில் நாதையர், கதிரைவேற்பிள்ளை, கார்த்திகேய முதலியார், பாம்பன் குமரகுருதாச அடிகள், உ. வே. சாமிநாதையர்,