உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

வ.ப.

19

விருதை சிவஞானயோகிகள், கா. நமச்சிவாய முதலியார், பா. வே. மாணிக்க நாயக்கர், இரா. இராகவஐயங்கார், மு. இராகவ ஐயங்கார், வெ. ப. சுப்பரமணிய முதலியார், இலக்குமணப் பிள்ளை. சி. கே. சுப்பரமணிய முதலியார், திரு. வி. கல்யாண சுந்தரனார். பூரணலிங்கம் பிள்ளை, இரா. பி. சேதுப்பிள்ளை, பண்டித மணி, நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டார், மறை மலையடிகள் முதலியோர் பணிகளுடன் தற்காலத் தமிழ் இலக்கியப் பகுதியை நிறைவிக்கிறார்.

66

‘உ உலகெங்கும் தமிழ் மணமும் சிவ ஒளியும் பரவி ஓங்குக. ஈண்டுக் குறித்த பெரும் புலவர்கள் வாயிலாகவும், அவர் வழிவரும் எதிர் காலப் புலவர்கள் வாயிலாகவும் தென்னாட்டிலும், பிற எந்நாட்டிலும் தமிழ் நூலறிவும், பழந்தமிழ்ப் பெரு நாகரிகமும், தமிழரது உயரிய கடவுட் கொள்கையும் நிலை பெற்றுத் தழைத் தோங்கி மன்பதைகட்கும் பெரும் பயனளிக்கும் வண்ணமும், தமிழறிஞர் ஊக்கமுற்றெழுந்து கழிபேரார்வத்துடன் தளர்வின்றி இடைவிடாது முயலும் வண்ணமும் அச்சீரிய பெருமுயற்சி தழைக்கும் வண்ணமும் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுள் திருவுளங் கொண்டு திருவருள் நல்குவாராக' என நிறைவிக்கிறார்.

சமய - இலக்கிய - வரலாற்று ஆய்வுகளில் காலமெல்லாம் ஈடுபட்ட கா. சு. தம் இலக்கிய வரலாற்றின் வழியாக நிலை பேறுமிக்கதும், வழிவழி வளர்ப்பதுமாம் ஒரு பெரு நெறியைத் தமிழுலகுக்குத் தந்துள்ளார் என்பதை இலக்கிய வரலாறு எழுதுவாரும், பயில்வாரும் மெய்யாக உணர்தல் ஒருதலை.