உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழர் நாகரிகம்

அல்லது

தொல்காப்பிய பொருளதிகாரக் கருத்து

சேலம் திருவாளர் ஆ. மாணிக்கம் அவர்களின் தமிழ் நெறி விளக்கப் பதிப்பகத்தின் வெளியீடாக 1939இல், பழந்தமிழர் நாகரிகம் என்னும் நூல் வெளிவந்தது; கழகப் பதிப்பு 1968 இல் வெளிவந்தது.

தொல்காப்பியச் சிறந்த கருத்துகள் அனைத்தையும் தமிழ் கற்பார் அனைவரும் இனிதுணருமாறு இந்நூல் எழுதப்பட்டது என்பதைப் பல்கலைப் புலவர் கா. சு. அவர்கள் தம் முன்னுரையில் குறிப்பிடுகின்றார்கள்., அன்றியும், பாட்டு தொகை முதலிய சங்க இலக்கியங்களை ஆய்ந்தறிவதற்கும் தக்க தோற்றுவாயாக அமைந்துள்ளது என்னும் குறிப்பையும் வைத்துள்ளனர்.

மு. சி. பூரணலிங்கனார், த. வே. உமா மகேசுவரனார், நாவலர் ந. மு. வே. அனவரத விநாயகர், இரா. திம்மப்பர், சி கே. ந.மு. சுப்பிரமணியனார், நாவலர் ச. சோ. பாரதியார்,மோசூர் கந்தசாமியார், சேலம் கல்லூரி முதல்வர் அ. இராமசாமியார் ஆகியோர் ஆய்வுரைகள் வழங்கியுள்ளனர்.

பொருளதிகாரத்துச் சில இயல்களுக்குப் புத்துரை கண்டவர் நாவலர் பாரதியார். அவர், “பழந்தமிழர் முறைகளுக்கு ஏலாத சில சூத்திரங்களுக்கிடையே வேறு பாடம் இருந்திருக்க வேண்டுமென விளக்கியும். அறவே பொருந்தாச் சில சூத்திரங்களைப் பிற்காலச் செருகலென விலக்கியும், தாமுணர்ந்த அரிய சித்தாந்த சைவக் கொள்கைகளைப் பல சூத்திரங்களில் புதை பொருளாகக் கண்டு கூறியும்” கட்டுரையாசிரியர் நூல் யாத்துள்ள திறத்தை வியக்கின்றார். இவ்வியப்பும் இதன் தொடர்பாய முக்குறிப்பும் கா. சு. வின் நூன்முறை தெரிந்து பிழிந்தெடுத்து

சாறு எனலாம்.

தமிழ்மொழி பற்றிய இனிய பாடல்களைத் தொகுத்து மூன்று பக்க அளவில் முதற்கண் வைக்கும் ஆசிரியர், “இந்தியா