உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

21

முழுமையும் ஒரே நாடாக ஏற்பட வேண்டுமானால். சென்னை மாநிலத்திற்கு வெளியில் உள்ளவர்களும் தமிழ்மொழியைத் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று காந்தியார் கூறுவதையும் சுட்டுகிறார்.

பழந்தமிழர் நாகரிகத்தைத் தொல்காப்பிய வழியே உரைக்கப் புகும் பல்கலைச் செல்வர் முற்சேர்க்கையாக (1-26) திருக்கோவையார் துறை விளக்கம் என்பதை வைக்கிறார். அதற்குக் காரணமாக, “தொல்காப்பியப் பொருளதிகார அகப்பொருட் சார்பான இயல்களில் துறை வரிசை கூறப் படாது தலைவன் தலைவி முதலியோர் கிளவி (பேச்சு) நிகழும் இடங்களே தொகுக்கப் பட்டிருத்தலின், அவற்றைக் கற்பதற்கு முன் துறை வரிசையறிதல் அவசியம். திருச்சிற்றம்பலக் கோவை யாருள் காணப்படும் துறை வரிசையைக் கற்றுக் கொள்வது போதிய துணை புரியுமாகலின், அவ்வரிசைகளை தொகுக்கின்றேன்” என்று உரைக்கிறார்.

இங்கே

திருக்கோவையாரில் அமைந்த துறைகள் 400. இவ் வனைத்தையும் புரிந்து கொள்ளுவண்ணம் பொருள் தொடர்பும் நிகழ்ச்சித் தொடர்பும் இயைந்து செல்ல, ஒரு கதையென அமைத்து அதன் நிறைவில் ‘திருக்கோவையார்க்குப் பேராசிரியர் உரைத்த உரையின் வழியது அது', என்கிறார்.

குமரியாறு தென்னெல்லையாக இருந்த காலத்துச் செய்யப்பட்டது தொல்காப்பியம். அது கி. மு. 2000 - க்கு முற்பட்ட நூல்; நூற் பொருள்களை அகம்புறம் எனப் பகுத் தாய்ந்தமையால் பண்டைத் தமிழர் உளவியல் அறிவு சான்றவர் என்பவற்றை விளக்கிய கா. சு. 'பொருள்' சு. 'பொருள்' என்னும் சொற் பொருளை விரிவாக ஆய்கின்றார். நூல் 'பொருளதிகாரக் கருத்து’ ஆகலின், அப்பொருளை விரிவாக ஆய்ந்தார் என்க.

பொருளதிகாரத்தில் வரும் ஒன்பது இயல்களையும் பொது வகையில் சுட்டிக் கூறிப் பின்னர்த் தனித்தனி இயல் வாரியாக விளக்கிச் செல்லும் வகையில் நூலை இயற்றியுள்ளார்.

அகத்திணையியல் : அகம் என்பது புறத்தார்க்கு உரைக்கப் படாத காதல். திணை என்பது ஒழுக்கம். ஒருவனுக்கும் ஒருத்திக்கும் உளதாய காதலொழுக்கமே அகத்திணை எனப் படும். அக்காதல் ஒருபாற்காதல், ஒத்த காதல், ஒவ்வாக் காதல் என்று மூவகைப்படும் என்பதைச் சுட்டி விளக்குகின்றார்.