உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

>இளங்குமரனார் தமிழ் வளம் – 14

பாலை என்பது பிற நான்கு நிலங்களுக்கும் பொதுவானது ஒன்றாகலின் அதனை ஆசிரியர் நடுவணது என்றார் என்னும் கா. சு, பொது என்ற பொருளில் நடு என்ற சொல் ஆதியில் வழங்கிற்று என்கிறார். நால்வகை நிலங்களுக்கும் பெயர்கள் அவ்வந் நிலத்துப் பூவின் பெயராகவே அமைந்தன என்கிறார்.

செயற்கை நிலனும், செயற்கைப் பொழுதும் உண்டென்னும் நச்சினார்க்கினியர் அவற்றை விளக்கினார் அல்லர். கா. சு., செய்குன்றினைச் செயற்கைக் குறிஞ்சி என்றும், சமவெளியில் வளர்க்கப்படும் செடிப் பரப்பினையும் புற்றரைகளையும் செயற்கை முல்லை என்றும், நகரமாடங்களைச் செயற்கை மருதம் என்றும், அலைவீசும் பெருங்குளக் கரைகளைச் செயற்கை நெய்தலென்றும், செயற்கை மணற்பரப்பைச் செயற்கைப் பாலை என்றும் கூறுதல் கூடும். இருண்ட பொழுதை இரவென்றும், ஒளியுள்ள பொழுதைப் பகலென்றும் கூறுவது செயற்கையே" என விளக்குவதும் மிகத் தெளிந்த புலமைத் திறத்தின் விளைவாகும்.

66

'நிலமும் காலமும் பற்றித் தோன்றி இயங்கும் இயற்கை செயற்கைப் பொருள்கள் அனைத்தும் கருப்பொருள் எனப் பட்டன' எனக் கருப்பொருள் இலக்கணம் வகுத்துக் காட்டு கிறார் கா. சு. (47)

காட்டிற்குத் தெய்வம் மாயோன் என்று பிற்காலத்தார் கருதினும் மாயோனாகிய கருநிறமுடைய அம்மையையே சிறப்பாகக்கொள்ள வேண்டும். 'மாயோன் மேய காடுறை யுலகமும்' என்ற பாடமே சிறந்தது என்கிறார். ஆனால், அப்பாடம் கருது பாடம் என்பதையன்றிக் கண்ட பாடம் எனச் சான்றில்லை!

66

இன்திறன் என் ற சொற்றொடரே இந்திரனென மருவிற்றென்ப; மன்திறம் என்றது மந்திரம் என மருவியது போல" என்னும் கா. சு., “வேந்தன் என்பானைச் சிவனென்பாரும் உளர்” என்கிறார். வண்ணன் என்ற என்ற சொல்லே ஆயிற்று” என்றும் கூறுகிறார்.

66

66

66

வருணன்

அறுவகைப்பட்ட பார்ப்பனர்” என்பதுதொல்காப்பியத்தில் வரும் தொடர். அதற்கு. அம்மை வழிபாடு, ஆனைமுகன் வழிபாடு, முருகன் வழிபாடு, சிவ வழிபாடு, திருமால் வழிபாடு, கதிரவன் வழிபாடு என்னும் ஆறு தெய்வங்கட்குப் பூசனை புரிவோரே அறுவகைப்பட்ட பார்ப்பனர் எனப்பட்டனர் என்கிறார். கா. சு. (49).

h.