உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.’ கலைக்களஞ்சியம்

23

ஆனைமுகன் வழிபாடு, சங்க நூல்களிலும் இடம் பெறாச் செய்தி. அதனை தொல்காப்பியத்தொடும் இணைத்துப் பார்த்தல் வலிந்த பொருளாதல் விளக்கம். இதனை, “ஆனைமுகக் கடவுளின் வழிபாடும் குறிஞ்சி நிலத்திற்கே உரியதாயினும் ஐந்திணைக் காதல் ஒழுக்கத்திற்குச் சிறப்பாவது முருக வழிபாடேயாம் என்பது பற்றி முருகனையே குறிஞ்சிக்குத் தெய்வமென்றார் போலும் என்பதும்” முன்னையோர் காள்கையைத் தழுவியதன்று. சிறுத் தொண்டர் படையெடுப்பின் பின்னர் வரப்பட்டது மூத்த பிள்ளையார் வழிபாடு என்பது கா. சு. வுக்குத் தெரியாததா? (48).

“அமரர்கண் முடியும் அறுவகை" என்பதற்கு, “வானவர், முனிவர், ஆனினம், மழை, அரசன், உலகம் என்ப என்று கூறி 'வாழ்க அந்தணர்” என்னும் திருப்பாடலைச் சான்றாக்குவதும் ஆயத்தக்கதே. (50).

66

முதல் கரு உரிப்பொருள்களின் முறை வைப்பை, “முதல், பொது, கரு, சிறப்பு; அதனினும் சிறப்பு உரிப்பொருள் என்று கொள்க” என்பது சிறப்புடைய குறிப்பு (57).

இம் முப்பொருள்களை ஆயும் கா. சு., இவற்றின் வழியே நில நூல், வானநூல், அறநூல், மெய்யறிவு நூல், உழவு நூல், விலங்கு நூல், புள் நூல், நிமித்த நூல், மர நூல் எனப் பல்வேறு நூலாய்வும் பண்டே இருந்தது என்பதைச் சுட்டுதலை நோக்க, அவர்தம் ஆய்வின் நுணுக்கம் நன்கு புலப்படுகின்றது (58).

கற்பு என்பது வெளிப்படையாய் நிகழ்த்தும் இல்லற வாழ்க்கை எனவும், களவு என்பது பிறர் நன்கறியாதபடி நிகழ்த்தும் ஒழுக்கம் எனவும் தந்திரமாக நடத்தும் ஒழுக்கம் எனவும் கூறப்படும் என்பது கா. சு. தரும் பொருள் விளக்கம். தொல்காப்பியத்தில் களவினைக் கந்தருவத்திற்கு ஒப்பிட்டது பிற்காலக் கருத்தாயிருக்கலாம் என்கிறார் (84).

காத

ஒருவன் ஒருத்தி என்பார்பால் காணப்படும் லொழுக்கத்தை தமிழ் நூலார் களவு, கற்பு என்பர் என்றும்; வட நூலார் மணத் த எண்வகையாகப் பிரிப்பர் என்றும் அடிப்படை வேறுபாட்டைச் சுட்டுகிறார். (84).

66

களவு, கற்பு, ஒப்பு, பொருள்கோள், அரும்பொருள் வினை, வண்டி, பேய் நிலை, தெய்வம் என்னும் எண்வகை நிறையும் தமிழ் நிலத்திற்குரியனவாய் இருந்தன என்பது தவறாகாது என்று கூறுதல் மேலாய்வுக்குரிய செய்தி (86)