உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

25

'காவணம் அமைத்துக் குளிர்ந்த மணல் பரப்பி, விளக்கு வைத்து, மாலை தொங்கவிட்டு, மக்கட் பேறுடைய நான்கு மகளிர், தலைவியைக் கற்பும் நன்மக்கட் பேறும் உடையாளாகுக் என வாழ்த்தி, ஈரிதழ் கலந்த நீரில் முழுகுவித்தல், புத்தாடை புனைவித்தல், மரபென்பது குறிக்கப்பட்டுள்ளது. தலைவி ஒண்குழை அணிதலும் கூறப்பட்டது என்பது அது (122).

பொருளியல் என்பது, அகப்பொருளியல்களுக்கு வழு வமைதி அல்லது புறனடை கூறுதல் எனச் சுட்டி விளக்குகிறார் கா. சு. சொல்லிற்கு இயற்கையாகவுள்ள பொருளுக்கு வேறாக அகப்பொருள் மரபில் சிறந்து வரும் கருத்தின் தன்மை கூறுதல் இவ்வதிகாரத்துள் காணப்படும் எனவும் விளக்குகிறார் (143).

மெய்ப்பாடு என்பதை,”உலகத்தார் உள்ள நிகழ்ச்சி உள்ளத்தில் நிகழ்ந்தவாறே புறத்து வெளிப்படுதல் உடம்பின் வாயிலாகவே ஆதலான், மெய்ப்பாடு எனப்படும்” என்று கூறு முகத்தான் பண்டை உரையாசிரியர் உரையை எளிமைப்படுத்திக் காட்டுவதுடன் தெளிவாகவும் புரிய வைக்கிறார் (151).

அகத்திணையியல், களவியல், கற்பியல் ஆகியவற்றை விரித்து எழுதும் கா. சு. பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல் ஆகியவற்றைத் தொல்காப்பிய நூற்பாவை எளிய உரைநடையில் தரும் குறிப்பில் சுருக்கி வரைகின்றார். (பொருளியல் (8), மெய்ப்பாட்டியல் (8) உவமவியல் (4) என்பவை 20 பக்க அளவில் அமைந்து விடுகின்றன (143-162).

பொருளதிகாரத்தில் நூற்பா எண்ணிக்கையால் பெருக் குடைய செய்யுளியலை ஏழுபக்க அளவில் (162-169) சுருக்கி வரைதலும் அப்பகுதியிலும் செய்யுள் உறுப்புகளைச் சுட்டிக் காட்டும் அளவில் நிறுத்திவிட்டு, செய்யுள் வகை பாட்டு உரை நூல் வாய்மொழி பிசி அங்கதம் முதுமொழி என ஏழாதலையும், வாயுறை வாழ்த்து அவையடக்கம் செவியறிவு நூல் அங்கதம் என்பவற்றையும், பண்ணத்தி மந்திரம் என்பவற்றையும், களவு, கற்பு ஒழுக்கங்களின் பகுதிகள், அப்பகுதிகளில் கூற்று நிகழ்த்து வோர் இடம், காலம், பயன், மெய்ப்பாடு, வண்ணம், வனப்பு என்பவற்றையும் கூறி அமைதலும் அப்பகுதி தனியாய்வுப் பொருளுக்குரியது எனக் கருதினார் என்று கொள்ளச் செய்கின்றது.

மரபியலில் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் பற்றிய நூற்பாக்களின் பொருளை மற்றை நூற்பாக்களின் பொருள் போலவே வரைந்து செல்கிறார் கா. சு. அவற்றின்

கா.சு.