உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இளங்குமரனார் தமிழ் வளம்

14

இயைபு பற்றியோ, பிறவற்றைப் பற்றியோ அவர் ஐயுற வில்லை என்பது விளங்குகின்றது. ஏனெனில், அவை இடைச்செருகல் என ஒரு கருத்துண்மை அவர்க்கிலது போலும்!

தொல்காப்பியத்தில் அகத்திணை இயலை அடுத்துப் புறத்திணை இயலை வைத்தாராகவும், அவ்வியலை இறுதிக்குக் கொண்டு வந்து வைக்கிறார் கா. சு. இயலை மாற்றி அமைக்கும் அவர் அதற்குரிய காரணத்தை உரைத்தார் அல்லர். அகத்திணைப் பொருளைச் சுருக்க உரைநடையாகவே சொல்லிச் செல்கிறார். இந்நெறியையே புலவர் குழந்தையார் தம் புத்துரை நெறிக்குக் கொண்டார் போலும்!

66

ரண்டோரிடங்களில் நூலாசிரியர் தம் கருத்தைச் சிறிது வேறாகக் குறித்திருத்தலைத்” தம் ஆய்வுரையில் திம்மப்பர் சுட்டுகிறார். தமிழ் மந்திரம், தமிழ்த் திருமணம் என்பவற்றைக் கா. சு. சுட்டுவது கொண்டு அக்கருத்தினைக் கண்டிருக்கலாம். 'மாயோன்' 'வண்ணன் என்னும் பாட வேறுபாடு கொண்டும் கூறியிருக்கலாம்.

தொல்காப்பியக் கருத்துகளை எளிமைப் படுத்துதல் என்னும் வகையிலேயே ஆசிரியர் கருத்தோட்டம் செல்கின்றது; அதில் வெற்றியும் கண்டுள்ளார் எனல் தகும். கா. சு. வின் பரந்த கல்வியின் பயனான ஆராய்ச்சியுரைகளைப் படிக்க நேர்ந்த போதெல்லாம், தாம் மிக அஞ்சியதாகவும், அவ்வச்சம் இவ் வுரை நடை நூலைப் படித்தபோது இல்லை என்றும் கூறும் சி. கே. சுப்பிரமணியனார் ஆய்வுரை நம் கருத்தை மெய்ப்பிக்கும்