உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

இளங்குமரனார் தமிழ் வளம் 14

புத்துரை

66

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி’'

66

என்னும் குறளுக்குப் ‘புலன்களிற் செல்கின்ற அவா ஐந்தினையும் அடக்கினானது வலிக்கு அகன்ற வானத்துள்ளார் இறைவனாகிய இந்திரனே அமையும் சான்று' என்று உரையும், 'தான் ஐந்தவியாது சாபம் எய்தி நின்று அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின் இந்திரனே சாலுங் கரி என்றார்" என்று விளக்கமும் வரைந்தார் பரிமேலழகர். பிறரும், இவ்வுரைக் கருத்தே கொண்டு வரைந்தனர்.

கா.சு. 'ஐம்பொறிகளையும் அடக்கியவனது வல்லமைக்குப் பெரிய விண்ணுலகத்திலுள்ள தேவர்கள் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்றாவன்' என்கிறார்.

எதிரிடை வழியால் ஐந்தவித்தான் ஆற்றலைப் பரிமேலழகர் காட்டியதை ஒவ்வாத கா. சு நேரிடை வழியால் காட்டுதல் நூலாசிரியர் முறை வழியில் செல்வதாம் இது, முற்றிலும் அழகர் உரைக்கு மறுப்புரையாம்.

நுண்ணிய ஆய்வு

பிறர் உரையை ஏற்று ஒருமருங்கு மறுப்பார் போம் நுண்ணிய வேறுபாடு காட்டவும் செய்கிறார் கா.சு.

'தெய்வம் தொழா அள்'

என்னும் குறளுக்குப் “பிற தெய்வந் தொழாது தன் தெய்வமாகிய கொழுநனைத் தொழா நின்று துயிலெழுவாள் பெய்யென்று சொல்ல மழை பெய்யும்' எனப் பரிமேலழகர் உரை கண்டார். கா. சு. 'தெய்வத்தைத் தொழாத போதும் கணவனையே தெய்வமாகத் தொழுது காலையில் எழுகின்றவள், மழையைப் பெய்யென்று சொல்ல அது பெய்யும்” என்கிறார்.

பெய்யெனப் பெய்யும் மழை போல்வாள் என உவமைப் படுத்து உரைப்பார் உளராயினும் கா. சு. அதனைக் கொண்டிலர் என்பதும், தொழாஅள் தொழுதெழுவாள் என்பதற்குப் புத் துரை வகுக்கிறார் என்பதும் எண்ணத் தக்கன.

வ்வாறே ‘மக்கள் மெய்தீண்டல்' என்னும் குறளுக்கு 'ஒருவன் மெய்க்கு இன்பமாவது மக்களது மெய்யைத் தீண்டுதல்’ எனப் பரிமேலழகர் முதலியோர் பொருள் கூற, 'குழந்தைகள்