உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் 'கா.சு.' கலைக்களஞ்சியம்

29

பெற்றோரது உடம்பைத் தொடுதல், அவர் உடலுக்கு இன்பம் தருவதாகும்” என்கிறார்.

மக்கள் மெய்தீண்டல் என்னும் தொகைச் சொல்லுக்குப் 'பெற்றோர், மக்களது மெய்யைத் தீண்டுதல்" எனப் பரிமேலழகர் பொருள் கொள்ள, “மக்கள் பெற்றோரது உடம்பைத் தீண்டுதல்’ எனக் கா. சு. உரைகொள்ளத் தீண்டுவார் தீண்டப்படுவார் மாற்றி யுரைக்கப் படுதல் அறியத் தக்கதாம்.

குழந்தையரின் மழலைச்சொல் பெற்றோர் காதில் விழுந்து இன்புறுத்துதல் போல், அவர்கள் மெய்யில் வந்தும் விழுந்து இன்புறுத்துவதாகக் கொள்ளலே, பொருந்தும் உரையாம் எனக் கா. சு. கண்டுரைத்தார் எனலாம்.

உரைமேல் உரை

குறளை எழுதிப் பொழிப்புரை எழுதும் கா. சு. தழுவல் உரையாகவும், பிறருரையாகவும் குறித்தலும் மேற் கொண்டார்.

தென்புலத்தார் என்பதற்குப் பொருள் கூறும் கா. சு. "இறந்த உயிர்க்குத் துணை நிற்கும் பிதிரர்கள்” என்கிறார். மேலும் “தென் புலத்தார் என்பார் தமிழ்நாட்டுப் புலவரெனவும், தமிழர் குருமார் எனவும் கூறுவாரும் உளர்” என்கிறார்.

தம்மின் தம் மக்கள் என்னும் குறளில் வரும் மன்னுயிர் என்பதற்கு ‘உள்ள உயிர்’ என்று உரை கூறுவதுடன், மன்னுயிர் என்பது அறிஞரைக் குறிக்கும் என்பாரும் உளர்" என்றும் வரைகிறார்.

66

செய்யாமற் செய்த உதவிக்கு" என்னும் குறளுக்குப் பொழிப்புரை வரைந்து அதன்பின் வேறொரு வகையில் பொருள் கோடலுமுண்டு என வரைகின்றார். இவ்வாறே வேட்ட பொழுதில் என்னும் குறளுக்கும் ஈருரை காட்டுகின்றார்.

ஒருரை கூறுவதுடன் அல்லது என்னும் குறிப்புடன் ஈருரையும் தரும் முறையிலும் உரை வகுக்கின்றார்.

“நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன்’

என்னும் குறளில் வரும் 'காமக் கலன்' என்பதற்கு 'விரும்பி ஏறும் மரக் கலங்களாம் அல்லது விரும்பிப் பூணும் அணிகளாம்' என்பது இதனை விளக்கும். ஆயின், இவ்வுரை இரண்டும் பரிமேலழகர் உரைக்கண் வருவனவே. இவ்வி வ்விரண்டினுள்