உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இளங்குமரனார் தமிழ் வளம்

14

ஒன்றைத் தெரிந்து சுட்டாமல் இரண்டையும் ஒப்பக் கொண்டார் இவர் என்க,

இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் என்பதற்கு நான்கு உரைகள் உரைக்கிறார் கா. சு. நான்கும் பரிமேலழகர் முதலாம் உரையாசிரியர்கள் உரைத்தனவே.

இவ்வாறே “அடியளந்தான் தாயது”, “தாமரைக் கண்ணான் உலகு என்பவற்றுக்கும் பிற்கால உரையாளர் வேறு வேறு புத்துரை கண்டாராக அவ்வுரையிடைக் கருத்தைச் செல விடாமல் பண்டை யுரையாசிரியர்களின் உரையைத் தழுவியே செல்கிறார்.

இவற்றை நோக்கும்போது ஒரு கருத்துத் தெளிவாக விளங்குகின்றது. திருக்குறளின் பொருளை எளிமையாக எவரும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்னும் எண்ணத்திலேயே கா. சு. உரை எழுதியுள்ளார் என்பதாம். இதனைத் தெளிபொருள் விளக்கப் பொழிப்புரை என்னும் பெயரீடும் விளக்குவதாம். விளக்கவுரை

கா. சு. உரை பொழிப்புரை எனப்பட்டாலும், அது தெளி பொருள் விளக்கப் பொழிப்புரை என்பதற்கு ஏற்பவும் நடையிடுதல் விளங்குகின்றது.

சிறப்பொடு பூசனை செல்லாது என்பதற்கு "முதலிலே திருவிழா நின்று பின்பு வழக்கப் பூசையும் நின்றுபோம் என்றவாறு” என்கிறார்.

ஒல்லும் வகை என்பதற்கு இயலும் வகை எனப்பொருள் கூறி, “உடம்பின் நிலைக்கும் பொருளின் அளவிற்கும் தக்கபடி செய்தலே இயலும் வகை செய்தல் என்பது” என்கிறார்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் என்பதற்கு "அன் பில்லாதவர்கள் தம் பொருட்டே எல்லாவற்றையும் தேடித் தமக்கே உரியதாக்கிக்கொள்வர்” என உரை விரிப்பதும், உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு என்பதற்கு. "உடம்பு எடாதபோது அறிவதற்கு அரிய உயிர்க்கும் எலும்பினை அடிப்படையாக உடைய உடம்பிற்கும் உண்டாகிய தொடர்பு” என உரை விரிப்பதும் பேருரை ஒப்பவை.

L பனைத்துணை என்பதற்குப் பனையளவு எனப் பொதுப் பொருள் குறித்தாலும் அப் பனைப் பெயர் தூண்டுதலால்