உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

31

னைய மரங்கள் போலாது பனை சிறிய உதவி கொண்டு பெரும் பயன் விளைத்தல் காண்க” என்று விளக்குவது அம் மரவியல் அறிந்த சிறப்பு வழிப்பட்டது.

காலத்தினால் செய்த உதவி ஞாலத்தில் பெரிது எனவும், பயன் கருதாமல் செய்த உதவி கடலிற் பெரிது எனவும், நிலையில் மாறாது அடங்கியவன் தோற்றம் மலையிற் பெரிது எனவும் வள்ளுவர் கூறுவார். அதனை விளக்கும் கா. சு., உவமையிலும் பொருள் உயர்ந்திருத்தலையும் நயமாக விளக்குகிறார்.

"நிலமாவது காலத்தில் பயன் விளைப்பதியல்பு; அது காலத்தில் பயன் விளையாமையும் உண்டு. அக்காலத்திலும் நன்றி செய்வார் சிறந்தவர்’ என்றவாறு.

"கடல் தன்பால் மேகம் கொண்ட நீரை மீட்டும் பெறுகின்றது. அங்ஙனம் பெறாதார் கடலினும் சிறந்தவர்” என்றவாறு.

"தானே உயர்வுடைய மலையினும் தனது ஆற்றலால் உயர்ச்சி பெற்றவன் பெரியவன்' என்றவாறு.

வை 'மாண இல’ ல' என்னும் சொற்களை நோக்கி வள்ளுவர் உள்ளம் உணர்ந்து உரைக்கும் நயத்தனவாம். கா. சு. வழங்கும் கொடையாம். கா.சு.வழங்கும்

குறிப்புரை, கருத்துரை

வை

பொழிப்புரையே பெரிதும் எழுதும் கா. சு, சில இடங்களில் குறிப்புரை, கருத்துரை ஆயனவும் வரைகின்றார்.

"விண்ணின்று பொய்ப்பின்' என்னும் குறளில் “கடல் சூழ்ந்த என்பதனால் கடல் நீர் அளவின்றியிருந்தும் அது பசி நீக்க உதவாது என்பது குறிப்பு” என்றும், ‘துறந்தார் பெருமை என்னும் குறளில் "துறவிகளின் பெருமை அளவில் அடங்கா தென்பது கருத்து” என்றும், “எழு பிறப்பும்" என்னும் குறளில் “மக்கள் செய்யும் நற்கருமங்களால் பெற்றோரையும் தீயவை தீண்டா என்றார்” என்றும், 'அன்போடியைந்த’ என்னும் குறளில் “அன்பு செய்யாக்கால் உடம்பு எடுத்த பயன் யாது மில்லை என்பது கருத்து” என்றும், “சொற்கோட்டமில்லது என்னும் குறளில் “சொல்லில் மாத்திரம் செப்பமாக இருந்து மனம் ஒருபால் சாயப் பெற்றால் அது நடு நிலைமை யாகாது என்றும் உரைக்கின்றார். இவ்வாறு சொல்வனவெல்லாம் தெளிவும் விளக்கமும் நோக்கியவை என்க.