உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இளங்குமரனார் தமிழ் வளம்

14

“ஏரின் உழாஅர்” என்பதற்குக் கலப்பையால் உழ மாட்டார் என்னும் பொருள்கூறும் கா. சு. “செவ்வையாக உ கா.சு. உழவு செய்ய மாட்டாதார்” என்றும் பொருள் கூறுவது இரட்டுறல்

பார்வையாம்.

சுருக்கமும் பெருக்கமும்

66

“ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் ச கூடலிற் காணப் படும்"

என்பதற்கு, 'பிணக்கில் தோற்றவர் வென்றவராவர்; அது புணர்ச்சியுட் காணப்படும்” எனக் குறள் போலவே பொழிப்பையும்

சுருக்கியுரைக்கின்றார்.

“வேட்ட பொழுதின் அவையவை போலுமே ம தோட்டார் கதுப்பினாள் தோள்”

என்பதற்கு, "புதிது புதிதாக விரும்பிய பொருள்கள் புதிது புதிதாக இன்பஞ் செய்வன போலப் பூக்கள் நிறைந்த கூந்தலை யுடைய இவளது தோள்கள் எப்பொழுதும் புதுமையான இன்பத்தைத் தருகின்றன என்று பொழிப்புரைத்து, “விரும்பிய பொருள்கள் விரும்பியவுடனே கிடைத்தால் எப்படி இன்பந் தருமோ அப்படி இவளுடைய தோளும் இன்பந் தருவது என்பதும் ஒன்று என்று மேல் விரிவும் தருகிறார். இதனினும் விரிவாக எழுதும் உரை விளக்கங்களும் உண்டு. அவற்றை முதற் குறள் உரையிலும், ‘வினைபகை' என்னும் 674 ஆம் குறளுரையிலும்

காண்க.

அதிகார ஆய்வு

அதிகாரத் தலைப்பு, பொருள், தொடர்பு ஆகியவற்றையும் உன்னிப்பாக நோக்கி உரை வரைந்துள்ளார் கா. சு.

ஏழாம் அதிகாரம் 'புதல்வரைப் பெறுதல்' என்பது. தனை, ஒவ்வொரு குறளிலும் மக்கள் என்றே நாயனார் ஆண்டு வந்தமையின் இவ்வதிகாரப் பெயர் மக்கட் பேறு என மாற்றப்பட்டது’ என்கிறார்.

இல்வாழ்க்கை என்பதற்கு “மனையாளோடு வீட்டிலிருந்து வாழ்தல்” என்னும் கா. சு., அதனை அடுத்து வரும் வாழ்க்கைத் துணை நலத்திற்கு “முந்திய அதிகாரத்துள் ஆடவர் இல் வாழ்க்கை நடத்தும் முறை கூறப்பட்டது. இவ்வதிகாரத்திலே