உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் சமயம்

வாணியம் பாடி வெ. சண்முக முதலியார் வெளியீடாக 1940 இல் வெளிவந்தது தமிழர் சமயம்.

66

இந்துமதம் என்பதற்கும் தமிழர் சமயம் என்பதற்கும் எவ்வளவு வேற்றுமையுண்டு என்பதை இந்நூல் மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது” என்கிறது முகவுரை (கி. ஆ. பெ. வி.) இந்நூலுக்கு ச. சோ. பாரதியார், து. சு. கந்தசாமியார், வெ. ப சுப்பிரமணியனார், நாவலர் ந. மு.வேங்கடசாமியார், தவத்திரு மறைமலையடிகளார், தமிழவேள் த. வே. உமாமகேசுவரனார், பண்டிதர் ஆனந்தர், காழி. சிவ. கண்ணுசாமியார் ஆகியோர் மதிப்புரைகளைக் கொண்டுள்ளது. இதில் கா. சு. வரைந்த முன்னுரையோ மதிப்புரையோ இல்லை.

66

‘அகில இந்திய தமிழர் மத மாநாடு” 1940 இல் சென்னையில் நிகழ்ந்தது. அம் மாநாட்டு வரவேற்புரையை விரிந்த அளவில் கா. சு. வழங்கினார். அவ்வுரை நூலின் முற்பகுதியாய் 25 பக்க அளவில் நடையிடுகின்றது. பின்னர்த் தமிழர் சமயம் என்னும் நூற்பகுதி 147 பக்க அளவில் இடம் பெறுகின்றது.

நூலின் இறுதியில் சென்னை, தங்கசாலை 205 ஆம் எண் சண்முகசுந்தரர் நடாத்தும் குருபர மருத்துவச் சிறப்புக் குறித்து 25 அடி அகவல் ஒன்றுடன் நூல் நிறைகின்றது.

அம்மருத்துவ மகனார் கா. சு. வின் நன்றியறிதலுக்குரிய நயத்தராக விளங்கினார் என்பது அகவலால் தெளிவாகின்றது. அவர் மருந்து, முன்னியது முடிக்கும் முருகன் அருள் போல் துன்னிய நோயைத் தொலைக்கும் என்கிறார்.

வரவேற்புரைப் பகுதியில் தமிழின் பழமை, செம்மை, தமிழர் நாகரிகம் இந்திய நாகரிகத்தின் அடிப்படையாயிருத்தல், திருக்குறளாம் பொதுமறை தமிழர் சமயமாதல், சைவ வைணவக் கொள்கைகளின் ஒருமைப்பாடு, அறுவகைச் சமயங்கள், கோயில் வழிபாடு, கோயிலமைப்பு, கோயிலில் புகுந்த ஆரியச் சார்பு, தமிழர் சமய சங்கம் ஒவ்வோர் ஊரிலும் நிறுவுதல், சமயச் சீர்திருத்தங்கள் என்பன விரித்துரைக்கப் படுகின்றன.