உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

66

14 இளங்குமரனார் தமிழ் வளம்

க்

இப்பொழுதுள்ள இந்து சட்ட மானது ஆரியரு குரியதாய்த் தமிழருக்குப் பொருத்தமில்லாது இருப்பதாலும் ஆண் பெண்களுக்குச் சமமான சொத்துரிமை கொடாததினாலும் கலப்பு மணத்திற்கு இடங் கொடாமையாலும் தேச வழமை முதலிய இலங்கைச் சட்ட நூல்களில் தமிழரது குடும்பச் சட்ட வழக்கங்கள் இந்து சட்டத்திற்கு வேறாகக் காணப்படுவதாலும், தமிழ் மக்களுக்குப் பொருள் வழக்குச் சட்டமாகிய சிவில் சட்டத்திலுள்ள குறைபாடுகளை ஒழித்துக் கலப்பு மணம், பெண் சொத்துரிமை முதலிய நன்மைகளைக் கைவரச் செய்வதற்கு உரிய சட்டத் திருத்தங்களை வகுப்பதற்கும் அவற்றை உரிய சட்ட சபைகளில் நிறைவேற்றுதற்கும் வேண்டிய கிளர்ச்சி செய்ய வேண்டும்.

'திருக்கோயில்களில்

தமிழிலே பூசனை முறைகள் ஏற்படுவதற்கும் கலாசாலை, ஏழை உணவுச் சாலை முதலியன நிறுவி நடத்துவதற்கும், குலத் தடையின்றித் தக்க அர்ச்சகர்களையும் வேலைக்காரர்களையும் நியமிப்பதற்கும், இசை கூத்து முதலிய கவின் கலைகளைப் பேணுவதற்கும், ஆதீனங்களின் செல்வத்தைத் தமிழர்க்குப் பயன்படும்படி செய்வதற்கும், உரிய கிளர்ச்சியை இடைவிடாது நடத்த வேண்டும்” எனச் சீர்திருத்தப் பகுதியில் சுட்டுகிறார்.

தமிழர் சமயக் கொள்கைகளையும், அவற்றிற்கு இணக்க மான சீர்திருத்த முறைகளையும் நாடெங்கும் போதிப்பதற்குத் தக்க சொற்பொழிவாளர்களைப் பயிற்றுவிப்பதற்குச் சிறந்த கலாசாலை தமிழ் நாட்டில் வசதி நிறைந்த இடங்களில் நடை பெற வேண்டுமென்றும், தமிழர் சமயம் நிலை பெற வேண்டுமாயின் தமிழ் மொழி பேணப்பட வேண்டும். தமிழ் மொழி நன்கு பேணப் படுதற்கு அதனைத் தாய் மொழியாக உடைய தமிழர் முன்னேற்றமடைய வேண்டும். முன்னேற்றமடைவதற்குத் தமிழரது பொருளாதார நிலை சிறக்க வேண்டும். அது சிறத்தற்குத் தமிழருட் செல்வர்களாயிருப்பவர்களும் சொல்லாற்றல் உடையவர்களும் சமுதாயத்தில் உள்ள ஏழை மக்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் வருந்தாதபடி அவரவர்க்கு உரிய தொழிலும் உணவும் அளித்தற்கேற்ற வாயில்களை வகுக்க வேண்டும். தொழில் வளர்ச்சியே வறுமையை எளிதில் ஒழிக்கும். தக்க தொழிலாளிகளுக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக் கத்தக்க ஏற்பாடுகள் சமுதாயத்தில் அமைந்திருக்க வேண்டும் என்றும் விரிவாகக் கூறுகிறார்.