உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

>இளங்குமரனார் தமிழ் வளம் 14

சிறந்தவனைப் பார்க்கிலும் இழிந்தவனே யாவான். ஒரு சமயத்தில் ஒருவன் பிறக்க வேண்டுமென்று கருதிப் பிறப்ப தில்லை. ஆதலால் ஒருவன் பிறந்த சமயத்தின் தாழ்வு அவனுக்கு ஏற்படாது.

கடவுளைப் பற்றிய கொள்கைகள் மக்களது அறிவின் அளவில் அடங்குவன அல்ல. ஆதலால் தன் சமயக் கொள் கையை நம்புவதற்காக ஒருவனைக் குற்றங் கூறுதல் கூடாது. தன் சமயக் கொள்கைகளை நன்கு உணர்ந்தபின் பிறிதொரு சமயக் கொள்கைகளை ஆராய்ந்து அவைகள் மிக நல்லவை என்று கண்ட ஒருவன் தன் சமயத்தைவிட்டு அதனுட் புகுதலையும் குறை கூற டமில்லை. தமது சமயத்தை நன்கறியாத பலரை ஒரு சிலர் தமது சமயத்திற்கு வலிந்து இழுத்தலும், முன்னவரது சமயக் கொள்கையை அறியாது அன்னோரைப் பழித்தலுமே சமயப் பிணக்கிற்கெல்லாம் அடிப்படை யான காரண மாகும் என்பது அது (24-5).

இவ்விடத்தே சமயக் கருத்துகள் பலவற்றை மேலும் ஆய்ந்து கூறுகிறார் கா. சு. அப்பரடிகள் சைவ சமயத்தில் இருந்து சமணஞ் சென்று, ஆண்டிருந்து மீண்டும் சைவம் வந்த வரலாறு அவ்வாய்வைத் தூண்டி விரித்ததாகும்.

பிற சமயத்தைப் பழித்தல் கூடாது என்பது உண்மையே ஆயினும் ஒவ்வொரு சமயவாதிகளும் தத்தம் சமயத்தைப் பாதுகாக்கும் கடமையும் மையும் உடை உடையவராவர். ஓர் உயர்ந்த சமயத்தின் உண்மைகளை உணர்ந்தவர். அச்சமயத்தில் உள்ள ஏனையோர்க்கு அவற்றைப் போதித்தலும் அவர்கள் பிற சமயத்தாரின் பற்றுரைகளால் ஏமாறா வண்ணம் அவர்களைப் பாதுகாத்தலும் செய்வது அவரது விழுமிய நற் பணியேயாகும். உயிர்கள் மேல் வைத்த இரக்கத்தால் இக் கடமையாற்றும் பெரியோரைச் சமயப் பகை விளைவிப்பவராகக் கருதலாகாது.

சைவ நாட்டிற் புகுந்து தம் அறிவுரைகளால் சைவராய்ப் பிறந்தாரைத் தம் சமயத்தே ஈர்த்த சமணர், புத்தர் முதலாயினாரைச் சைவ சமயத் தலைவர் மறுத்துக் கூறிய அருள் மொழிகள் சைவ சமயத்தாரைப் பாதுகாக்கவும் சமண சமயத்தினரது அற்றைக் காலச் சீர்கேட்டினை வெளிப்படுத்தவும் எழுந்தனவென்றே கருதற்பாலன.

அகனமர்ந்த கருத்தினராய் அறுபகைசெற்று ஐம் புலனையும் அடக்கி மெய்ஞ்ஞானத்தால் முழுமுதற் கடவுளை வழிபடும்