உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

இளங்குமரனார் தமிழ் வளம் – 14

நாவுக்கரசருக்குச் செய்யப்பட்ட இடர்களையெல்லாம் எண்ணி நைந்தெழுதும் கா. சு., அவர் அவ்விடர்களை யெல்லாம் வென்ற திறத்தையும் விளக்குகிறார்.

சில

கா.சு.

நன்கு துயில்கின்றவனைத் தட்டியெழுப்பினாலும் அவன் வேளை உடனே எழாமல் இருப்பதற்குக் காரணம் தட்டியதைத் தான் உணராமையேயாகும். மேலைத் தேசத்தில் கணித நூலகத்தே தன் கவனம் முழுவதும் செலுத்திய ஒரு புலவன் தன் ஊரிலே பகைஞர் படையெடுத்து வந்ததையும் அவர்கள் தன்னைச் சூழ்ந்தமையையும் உணராதிருந்தான் என்று கேள்விப் படுகிறோம்.

நனவிலேயும் சுழுத்தியிலேயும் உணர்ச்சியற்ற நிலை எய்துதல் எளிதாயின் அவற்றிற்கும் அப்பாற்பட்ட தூயநிலை கடந்து அதீதத் தன்மையுற்றுச் சிவபோகத் தேன் பருகுதலிலேயே ஆழ்ந்த சிந்தையுடையார் தமது வெளியுடம்பிற்கு வரும் இடையூறுகளைச் சிறிதும் உணராமை வியப்பன்று.

நம் நாயனார் திருமேனிக்கு நேர்ந்த துன்பங்கள் ஒன்றையும் உணர்ந்திலர். நெருப்பினைத் தின்னும் தித்திரிக்கு அதற்குத் தகுந்த உடம்பையும், பாம்பின் நஞ்சினால் கேடுறாத மயிலுக்கு அதற்கேற்ற மேனியையும் உதவிய திருவருட் சக்திதானே தனது வயமாயுள்ள திருநாவுக்கரசரது திருமேனிக்கு அத்தகைய தன்மைகளை வேண்டியபோது நல்கி அனலாலும், நஞ்சினாலும் யாதொரு கெடுதியும் இல்லாமல் பாதுகாத்தமை ஒரு வியப்பாமோ? அவ்வாறே கல்லும் மெல்லியதாய் மிதந்தமையும் ஆமன்றோ” என விளக்குகிறார் (37-38).

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் இருவர் தம் திரு வருளன்பையும், நட்பையும், பெருங்கிழமைத் தொண்டையும் உன்னி உருகும் கா. சு., ‘அன்பும் அருளும் தாயும் குழந்தையும் போலுமாதலாலும், இருகண் ஓர் உடம்பின் உறுப்பாகி அமைதலாலும், சிவமும் சத்தியும் ஒரே பொருளாதலாலும் அவற்றிற்கு உவமேயமாகக் கூறப்பட்ட நாயன்மார்கள் இருவரும் அவை போன்ற ஒற்றுமையுடைய கழிபெரு நட்பினர் என்பது ஊகித்தற் பாலது.' என்கிறார் (53).

திருநல்லூரிலே இறைவர், தம் தலைமேல் திருவடிச் சுவடு வைக்க வேண்டி நின்றது, பிறவி அறவே அற்றுத் திருவடியே பெறும் சிவ சாயுச்சியமாகிய முடிவிலின்ப நிலைக்கு அறி குறியாம் ஆதலின், அதற்குத் தாம் உரியார் என்னும் நினைவு தமக்கு நிகழ்ந்து பிறப்பிறப்பு அச்சத்தை ஒழித்தற் பொருட்டு