உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் 'கா.சு.' கலைக்களஞ்சியம்

55

அதன் அடையாளத்தையும் திருமேனியின் பகுதியாகப் பெறக் கருதிப் போலும் என்கிறார். (55).

அப்பூதியடிகளின் போற்றுதலுக்குரிய நாவுக்கரசரை எண்ணும் பெருகமனார் கா. சு., 'சிவநெறி ஒழுகிய அந்தணர் அக்காலத்தே வீண் குல நலம் பேணாது வேளாளர் முதலியோரைச் சூத்திரர் என்று எண்ணாது அவருட் சிறந்து விளங்கிய சிவநேசச் செல்வர்களைத் தாமும் வழிபட்டுப் போற்றினர் என்பது தெளிவு என்கிறார் (61). மேலும், திருப்பதிகத்தாலேயே மூத்த திருநாவுக்கரசின் நஞ்சின் விடத்தைத் தீர்த்த நாவுக்கரசர் செயற்பாட்டைக் குறிக்கும் கா. சு, யாதொரு வகையான மருந்தும் மந்திரமும், பார்வையும் கைக்கொள்ளாமல், திருவருள் ஒன்றினையே நம் நாயனார் வேண்டிப் பாடினர். உடனே மகன் உயிர் பெற்றெழுந்தான். இதனைச் சித்தர் நூல் வல்லார் ஞானசித்தி என்பர். ஞானிகளுக்கே இவ்வகைச் சித்து இயலும். அவரது உள்ளத்தே இறைவன் எப்போதும் கலந்து நின்று யாதொன்று கருதினும் அதனை உடனே நிகழும் வண்ணம் அருள்வான். இதுவும் நாயானாரது உயர் ஞான நிலைக்கு ஒரு சான்றாகும்' என்கிறார். (66).

66

கா.சு.,

நாவுக்கரசர் திருத்தல வுலாவின் போது பட்ட பசி, நீர் வேட்கை, தளர்வு முதலியவற்றைப் பொருட்படுத்தாமல் இறைவன் பால் சார்த்திச் சென்ற அருமையை எண்ணும் கா. சு., “சிவப் பேறெய்திய மெய்ஞ்ஞானிகள் தமது உடம்பிற்கு நேரிடும் இடையூறுகளை ஒரு சிறிதும் பொருட் படுத்த மாட்டார் என்பது நமது நாயனார் திருப்பைஞ்ஞீலிக்குச் செல்லுங்கால் பசியும் தாகமும் அதிகப்பட்ட போது அவற்றாற் சித்த மலையாதே அப் பைஞ்ஞீலிப் பெருமானை வணங்குதலையே கருத்தாகக் கொண்டு மேற் சென்றமையானும், அவ்வாறே திருக் கயிலைக்குச் சென்ற காலை தமது உறுப்புக்கள் தேய்ந்தொழிந்த பொழுதும் அவற்றைப் பற்றி ஒரு சிறிதும் கருதாது கயிலைக் காட்சியையே பொருளாகக் கொண்ட காண்டமையானும் மையானும் இனிது விளங்கும் என்கிறார். மேலும், தவம் செய்வார் தம் கருமம் செய்வார் என்பதற்கும் கருமமே கண்ணாயினார் மெய் வருத்தம் பாரார் பசி நோக்கார் கண்துஞ்சார் என்பதற்கும் திருநாவுக்கரசரிலும் சிறந்த எடுத்துக்காட்டாகவுள்ளார் உலகத்தில் யாருமில்லை என்பது தெளிவு என்கிறார் (80-91).

திருக்கயிலாயத்தை அடையத் திருநாவுக்கரசருக்குக் கடவுள் அருள்புரியாமை, இன்னும் சில காலம் உலகில் வாழ்ந்து