உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

14 இளங்குமரனார் தமிழ் வளம்

திருத்தொண்டு புரிய வேண்டுமென்று அவன் திருவுள்ளங் கருதியதே என்று கூறுகிறார். (91).

நாவுக்கரசர் திருமடம் ஒன்று திருப்பூந்துருத்தியில் அமைத்ததை உரைக்கும் கா. சு. அம்மடம் பின்னை என்ன ஆனது என்பது தெரியவில்லை என்றும் இந்நாட்டு மக்கள் நடுவே எத்தகைய மடமும் நெடுநாளாக நிலைத்தோங்கல் அரிது போலும்” என இரங்குகின்றார்.

திருநாவுக்கரசர், சொல்வேந்தர், வாகீசர், வாகீசத் திருவடி, நிறைதவத்தோர், அருந்தவ வேந்தர், ஆண்ட அரசு, இன்றமிழீசர், தமிழ்வேந்தன், தமிழாளியார், தவமுதல், மூலஅன்பர், செப்பரிய பெருமையினார், கலைவாய்மைக் காவலர், விழுத்தவத்து மேலோர், உழவாரப்படையாளி, திருத்தொண்டர் என்றெல்லாம் வழங்கும் பெயர்களை எடுத்தோதி இனிது விளக்கி நாவுக்கரசர் சிறப்புப் பெயர்களை ஆய்கிறார் கா. சு.

ம்

தேவார ஆராய்ச்சிப் பகுதியில் இறைவன் திருவடிச் சிறப்பைக் கூறுமிடங்களும் பதிகங்களும் உளவாதலைக் கணக்கிடும் கா. சு. தாழ்மை மிக்க அவரது மனத்தை விளக்கும் என்கிறார். குறுந்தொகை, தாண்டகம் ஆகியன இவர் தேவாரத்தன்றிப் பிறர் தேவாரங்களுள் காணப் படாமை சுட்டும் கா. சு. தாண்டகங்கள் பலவும் அருச்சனைப் பாட்டாம் சிறப்பை எடுத்துரைக்கிறார்.

ஒளியையும் இன்சுவையையும் உணர்த்தும் அடை மொழிகள் பயில வழங்கும் சிறப்பை நாவுக்கரசர் தேவாரத்தில் கண்டு கண்டு காட்டுகிறார் கா. சு. இவ்வாறே உருவகம், உவமை, சொல்லாட்சி, இயற்கை வர்ணனை' அகப்பொருட்டுறை இன்னன அமைந்துள்ளமையை விரித்துரைக்கிறார்.

"முன்னம் அவனுடைய” என்னும் தேவாரத்தில் திருக் குறள் கடவுள் வாழ்த்து முழுமையும் அமைந்திருத்தலை விளக்கும் அளவான் நூலை முற்றுவிக்கிறார் கா. சு. அதனை நோக்கும் போது, "பழந்தமிழ் நூல்களின் உள்ளுறைகளை நோக்குதற்கென்றுகா. சுப்பிரமணிய பிள்ளைக்கு ஒரு தனிக்கண் அமைந்துள்ளது போலும். அவரிடத்திருந்து பலதிறத் தமிழ்ப் புதுமைகள் பிறக்கும். அவைகளைப் பழைமையென்றே அவர் சொல்வார். அஃதெனக்கு வியப்பாகவே வியப்பாகவே தோன்றும்’ என்று திரு. வி. க கூறுவது நினைவில் நிற்கும்.