உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர மூர்த்தி சுவாமிகள்

சரித்திரம்

1928 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் (விபவ ஆண்டு ஆனித் திங்கள்), கழக வெளியீடு 98 ஆக வெளிவந்த நூல் இது.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பெயர் பதிப்புரையிலே அழகுருவடிகள்' என்றிருப்பது, பதிப்பகம் அந்நாளிலேயே காட்டிய தனித்தமிழ் விழிப்புணர்வைக் காட்டுகின்றது.

கா. சு. அவர்கள் அப்பதிப்புரையிலே, "தமிழ், ஆங்கிலம், சட்டம் முதலியவற்றில் பெரும் புலமை நிரம்பி, அன்பு அற வொழுக்கங்களிற் சிறந்து விளங்கித் தமிழ் மக்கள் ஆக்கங் கருதி இதுபோன்ற பல ஆராய்ச்சி நூல்களை எழுதி உதவி வரும் திருவாளர் கா. சுப்பிரமணியப்பிள்ளை' எனப் பாராட்டப் படுகின்றார்.

சுந்தரர் புகழ் மாலையை முதற்கண் கொண்ட இவ் வரலாற்று ஆராய்ச்சி நூல், தோற்றுவாய், தடுத்தாட் கொள்ளப் பெற்றது, தில்லை வணங்கித் திருவாரூர் அடைதல், பரவையார் திருமணம், நெல் பெற்ற அற்புதம், செங்கல் பொன்னாக்கப் பெற்றதும், இறைவன் வழிகாட்டப் பெற்றதும், தண்ணீரும் பொதி சோறும் பெற்றது, சங்கிலியார் திருமணம், திருவாரூர்க்குத் திரும்பி இறைவனைத் தூதுவிடல், ஏயர்கோனுக்குச் சினந் தீர்த்தது, சேரமான் பெருமாள் நட்பு, வெள்ளை யானை, மேற் கயிலைக்குச் சென்றது, சுந்தரர் தேவார ஆராய்ச்சி, சுந்தரர் திருப்பெயர் விளக்கம் என்னும் பதினான்கு தலைப்புகளில் 246பக்கங்களில் இயல்கின்றது.

நூல் இயலும் தலைப்புகளைப் பார்த்த அளவானே சுந்தரர் வரலாற்றின் வரைபடமென விளங்குதல் வெளிப்படை. இத்தலைப்பை முறையே சான்ன அளவான சுந்தரர் வரலாற்றுச் சுருக்கம் அறிய வருதல் கண்கூடு. இவ்வாறே எவ்வரலாற்றையும் பகுத்து ஆய்ந்து தக்க தலைப்பிட்டு எழுதுதல் கா.சு. வின் வழக்கம் என்பதும் நன்கு விளங்கும். இஃதவர் தந்த கொடை மரபாகும்.