உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

73

என்றார். இதனையே தமிழ்ப் பற்றுடையார் பேரவைகளில் கிளர்ச்சி மிக வழங்கி வருகின்றார்கள். இறைவன் மாதொரு பாகன் என்ற கருத்தை அடிக்கடி நினைவூட்ட விரும்புவார்,

66

6

'குவளைக் கண்ணி கூறன் காண்க அவளும் தானும் உடனே காண்க

99

என்னும் திருவாசக அடிகளை முறையே முதன்மொழியாகவும் எதிர்மொழியாகவும் வழங்குதல் மிகவும் பொருத்தமானது' என நூலை நிறைவிக்கிறார் (118).

மாணிக்கவாசகரைப் பற்றிய மலையாளக் கிறித்துவச் செப்புப் பட்டயம் ஒன்றைத் திருவனந்தபுரத்திலுள்ள கேரள சங்கத்தின் தொன்னூலமைச்சர் டி. கே. ஜோசப் என்பார் வழியே பெற்றதுடன், அதன் மொழிபெயர்ப்பையும் இணைத்திருத்தல் பாராட்டுக்குரியது. அதில் காணப்படும் காலம் கி. பி. 293 என்பது. அந்நாளில் மலையாள மொழி தோற்றமுற்றதில்லையே என்னும் எண்ணம் தோன்றினும், கால ஆய்வுக் குறிப்பு எனக் கொண்டும் மேலாய்வுக்குப் பயன்படும் எனலாம்.