உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் சுவாமிகள் சரித்திரமும்

பெரிய புராண ஆராய்ச்சியும்

இப்பெரும் பெயர் நூல், 1928இல் கழகத்தின் 108 ஆம் வெளியீடாக வெளி வந்தது. 108 என்பது, தற்செயலான அமைதலாகக் கொள்வார், உளராகலாம். ஆனால் கழக அமைச்சர் திருவரங்கனார், அவர்தம் இளவலார் தாமரைச் செல்வர் வ. சுப்பையா ஆகியவர்களை உணர்ந்தவர் ‘திட்ட மிட்ட எண்' எனத் தெளிவாக அறிவர்.

சேக்கிழார் புகழ்மாலை, தோற்றுவாய், சேக்கிழார் மரபு விளக்கம், வேளாளர் ஆராய்ச்சி, பெரிய புராணத் தோற்றம், சேக்கிழாரும் பெரிய புராணமும், பெரிய புராண அரங்கேற்றம், சோழ அரசனும் ஊர்கோலமும், பெரிய புராண ஆராய்ச்சி என்னும் ஒன்பான் தலைப்புகளில் நூல் இயல்கின்றது.

தோற்றுவாய்க்கு முற்பட்ட சேக்கிழார் புகழ்மாலையில், காஞ்சிப் புராணம், திருவானைக்காப் புராணம், திருப் பெருந் துறைப் புராணம், திருவம்பப் புராணம், சேக்கிழார் புராணம் என்னும் ஐந்து புராணங்களில் இருந்து தெரிந்தெடுத்து ஒவ்வொரு பாடலும், சேக்கிழார் பெருமை கூறும் பாடலென்றும் (கருங்கடலைக் கை நீத்து) ஆக ஆறு பாடல்களை அமைத்துள்ளார்.

தோற்றுவாயில், சமயத் தொடர்பாகவே வரலாறுகள்

எழுதப்பட்டன என்றும், அவை புராணம் எனப்பட்டன என்றும் கூறுகிறார். இதிகாசம், தலபுராணம் பதினெண் புராணம் என்பவற்றை ஆய்கிறார். சூதர் காலத்திற்குப் பிற்பட்ட செய்திகளும் காணப்படுதலால், புராணங்கள் வெகு காலத்தில் எழுந்தனவல்ல என்றார். சூதர் சிவ புராணம் உரைத்தாரெனச் சம்பந்தர் சொல்வதால், விண்டு புராணம் உரைத்தவர் அவராக இருக்க முடியாது என மறுக்கிறார். ஏனெனில், இருகடவுட்குப் பரத்துவம் கூறமாட்டார்’ என்பது அவர் கூறும் மறுப்பாகும். "இதிகாச புராணங்களில் பொருத்த மில்லாதவற்றைக் களைதலே நன்று" நன்று' என்னும் குறிப்பை வைக்கிறார் கா. சு. (4).

ஒருவர்